சுனாமி பாதித்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. சலுகை
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அண்ணா பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 25 லட்சம் நிதியை ஏற்கனவே முதல்வர்ஜெயலலிதாவிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி வழங்கியுள்ளார்.
இந் நிலையில் சுனாமியால் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
அதன்படி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம், படிப்புக்கட்டணம்ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவைக்கான கட்டணங்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இதுதவிர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களுக்கு லோன் வழங்கக் கோரி பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில்பரிந்துரைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2005-06ம் ஆண்டில் படிப்பை முடிக்கும், சுனாமியால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிகவேலை கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வராத சுய நிதி பொறியியல் கல்லூரிகள், பிற கல்லூரிகளிலும் இதேபோல மாணவர்களுக்கு சலுகைவழங்கக் கோரி அக்கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்களுடன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி பேசவுள்ளார்என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்













Click it and Unblock the Notifications