ஆடிட்டர் வழக்கிலும் அப்பு, ரவி கைது
காஞ்சிபுரம்:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் கூலிப் படைத் தலைவன் அப்பு மற்றும் காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சி சங்கர மட பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் முதல் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கிலும் கூலிப் படைத் தலைவன் அப்பு, காண்டிராக்டர் ரவிசுப்ரமணியம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்புவிடம் இதற்கான வாரண்ட்கொடுக்கப்பட்டது.
அதேபோல கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிசுப்ரமணியத்திடம் இன்று வாரண்ட் கொடுக்கப்பட்டது.
ஜாமீன் உத்தரவு ஒப்படைப்பு:
இந் நிலையில் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன்உத்தரவினை வேலூர் சிறைச் சாலை கண்காணிப்பாளர் ராமச்சந்திரனிடம் ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கிருஷ்ணசாமிஒப்படைத்தார்.
இருப்பினும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதால் அவர்வெளியே விடப்படவில்லை.
ஜெயேந்திரரின் காவல் நீட்டிப்பு:
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்துசெங்கல்பட்டு நீதிபதி உத்தமராஜ் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஜெயேந்திரரின் காவலை இந்த மாதம் 19ம் தேதி வரைநீட்டித்து உத்தரவிட்டார்.
அதேபோல் ராதாகிருஷ்ணன் வழக்கில் ஜெயேந்திரர், கதிரவன் உட்பட 7 பேரின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இவர்களதுநீதிமன்றக் காவலை சைதாப்பேட்டை 23வது நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி வீடியோ கான்பரன்சிங் மூலம் நீட்டிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர் இன்று சைதாப்பேட்டை 23வதுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
டிரைவரிடம் விசாரணை:
இதற்கிடையே, சங்கர மடத்தின் கார் டிரைவரான கண்ணன், சென்னை கோடம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்ஆகியோரிடம் இன்று காஞ்சிபுரம் போலீஸார் காட்டுப் பங்களாவில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications