ஜெயேந்திரர்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
டெல்லி:
சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரருக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு தமிழக போலீசிடம் உச்சநீதிமன்றம் கோரியது. ஆனால், அதற்கான ஆதாரங்களைத் தர முடியாமல் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் தடுமாறினார்.
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர், நீதிபதி நோயெல்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்இதனை விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதி லஹோத்தி, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ். துல்சியிடம், ஜெயேந்திரர் மீதுதொடரப்பட்டுள்ள வழக்கின் நேரடி ஆதாரங்கள், சாட்சிகளைப் பார்க்க விரும்புகிறோம் என்றனர்.
இதையடுத்து வழக்கின் முழு விவரங்கள் அடங்கிய கேஸ் டைரியையும், ஆதாரங்களையும் சீல் செய்யப்பட்ட கவரில் வைத்துநீதிபதிகளிடம் துல்சி வழங்கினார். கொலையில் ஜெயேந்திரருக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகஅவர் அப்போது கூறினார்.
ஆனால், அந்த ஆதரங்களைப் பார்த்த நீதிபதி, நாங்கள் கேட்பது இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு எதிராக நேரடியானசாட்சியம் உள்ளதா? என்பதைத் தான். இருந்தால் அதைக் கொடுங்கள். ஜெயேந்திரருக்கு எதிராக சங்கரராமன் எழுதிய கடிதங்கள்தவிர, இந்தக் கொலையில் ஜெயேந்திரரை சம்பந்தப்படுத்தும் நேரடி சாட்சி வேறு என்ன இருக்கிறது என்று கேட்டனர்.
ஜெயேந்திரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரிமன் பேசுகையில், ஜெயேந்திரருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக அரசுத்தரப்பு கூறும் காரணங்களில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. கொலையாளிகளுக்குத் தர ரூ.50 லட்சம் பணம் காஞ்சி மடத்தின்ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் இருந்து எடுக்கப்பட்டதாக போலீஸ் கூறியது.
ஆனால் மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் நிரூபித்தவுடன் போலீசார் தங்களதுநிலையை மாற்றிக் கொண்டனர். அது நில விற்பனை மூலம் கிடைத்த பணம் என்றும், அந்தப் பணத்தை ஜெயேந்திரர் தனதுஅறையிலேயே வைத்திருந்தாகவும் அதைத் தான் எடுத்துக் கொலையாளிகளுக்குத் தந்ததாகவும் கூறினர்.
ஆனால் போலீசார் சொல்லும் அந்த நிலம் சங்கரராமன் கொலை நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே விற்கப்பட்டு, அதன்மூலம் கிடைத்த பணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள மடத்தின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது என்றார்.
இதையடுத்துப் பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் துல்சி, பண விஷயத்தில் மடத்தின் பல முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன.ஜெயேந்திரர் கைதுக்குப் பின் கணக்கு, வழக்குகளை எல்லாம் திருத்தி எழுதியிருக்கிறார்கள். அது தொடர்பாகவும் விசாரணைநடந்து வருகிறது. விசாரணை முடிந்தால் தான் இந்தப் பண விவகாரத்திலும் தெளிவான பதில் தர முடியும் என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், நாங்கள் மீண்டும் கேட்கிறோம். இந்தக் கொலையில் சங்கராச்சாரியாரைத் தொடர்புபடுத்தஉங்களிடம் நேரடி ஆதாரம் என்ன இருக்கிறது?, சதியை சுற்றியே வழக்கை பின்னுகிறீர்களே என்றனர்.
மீண்டும் சங்கரராமன் எழுதிய கடிதங்கள் குறித்து துல்சி விளக்க, நாங்கள் நேரடி சாட்சி இருக்கிறதா என்று கேட்கிறோம் எனமூன்றாவது முறையாக துல்சியிடம் நீதிபதிகள் கேட்டனர்.
ஆனால், அதற்கும் சங்கரராமன் எழுதிய 39 கடிதங்களையே முன் வைத்து பதிலளித்தார் துல்சி. சங்கராச்சாரியாரின் பெண்தொடர்புகள் குறித்து சங்கரராமன் எழுதியுள்ளார் என்று துல்சி கூற, அவரை இடைமறித்த நீதிபதிகள், பெண் தொடர்புகளைநிரூபிக்க உங்களிடம் ஆதாரம் உள்ளதா? அல்லது கடிதங்களை வைத்துக் கொண்டு மட்டும் பேசுகிறீர்களா என்று கேட்டனர்.
அப்போது நரிமன் பேசுகையில், குற்றவாளிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட சிலர் கொடுத்த வாக்குமூலங்களை மட்டும்வைத்துக் கொண்டு ஜெயேந்திரரை இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறது தமிழக போலீஸ் என்றார்.
சங்கரராமன் எழுதிய கடிதங்களால் ஜெயேந்திரர் எரிச்சலானார், கொலை செய்யத் திட்டமிட்டார் என்று போலீஸ் தரப்புவாதிடுவது சரிதான். ஆனால், கடிதங்கள் வந்தபோது மடமோ அல்லது ஜெயேந்திரரோ சங்கரராமனுக்கு எதிராக மிரட்டலில்ஈடுபட்டார்களா என்று நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த துல்சி, சங்கரராமனை மடத்தினரோ அல்லது ஜெயேந்திரரோ மிரட்டியதற்கான ஆதாரம் ஏதும் எங்களிடம்இல்லை.
அதே நேரத்தில் மற்ற குற்றவாளிகளின் வாக்குமூலம் சங்கராச்சாரியாருக்கு எதிராக உள்ளது. இதன் அடிப்படையில்சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் வழங்க முடியாது. பப்பு யாதவ் வழக்கில் பிறரது வாக்குமூலத்தை வைத்துத் தானே அவருக்குஜாமீன் மறுக்கப்பட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பப்பு யாதவ் வழக்கில் நேரடி ஆதாரங்களை அடிப்படையாக வைத்துத் தான் நீதிமன்றம் அந்தமுடிவை எடுத்தது. அந்த வழக்கையும் இதையும் ஒன்றாக பார்க்க முடியாது என்றனர்.
தொடர்ந்து பேசிய துல்சி, மடத்தின் தவறுகளை சுட்டிக் காட்டியதால் சங்கரராமனைக் கொல்லக் கூடிய அளவுக்கு ஜெயேந்திரருக்குமட்டும் தான் கோபமும் திட்டமும் இருந்தது. இந்த வழக்கில் பல சாட்சிகள் மடத்தின் ஊழியர்கள் தான். அவரை ஜாமீனில்விடுவித்தால் சாட்சிகளை அடக்கிவிடுவார். அவருக்கு எதிராக ஊழியர்கள் சாட்சியளிக்க முடியாமல் போகலாம்.
சங்கராச்சாரியாரைக் கைது செய்யாமல் விட்டிருந்தால் ஹெலிகாப்டரில் தப்பி முக்கிய விமான நிலையத்துக்குச் சென்றுஅங்கிருந்து விமானத்தில் வெளிநாட்டுக்கு ஓடியிருப்பார். இதற்காகவே ஹெலிகாப்டர் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
பணம் கொடுத்து போலியான 5 பேரை சரணடைய வைத்ததன் மூலம் வழக்கையே திசை திருப்பிவிடவும் திட்டமிட்டார்ஜெயேந்திரர். இந்த வழக்கே சதித் திட்டம் அடிப்படையிலானது தான். சங்கரராமனைக் கொல்ல சங்கராச்சாரியார் திட்டமிட்டார்என்பதற்கு போதிய நேரடி ஆதரங்கள் உள்ளன. அதை நீதிமன்றத்திடமும் தந்துள்ளோம்.
இந்த வழக்கில் கதிரவன், ஜெயேந்திரர், அப்பு ஆகியோர் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதற்கு எங்களிடம் இரு நேரடி சாட்சிகளும்இருக்கின்றன.
இந்த ஆதாரங்கள், சாட்சிகளுக்குள் உச்ச நீதிமன்றம் இப்போது மிகவும் ஆழமாகப் போக வேண்டியதில்லை. இன்னும்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த சாட்சிகளை வைத்து எந்த முடிவும் எடுப்பது சரியாக இருக்காதுஎன்றார் துல்சி.












Click it and Unblock the Notifications