சுனாமி: வீடிழந்தவர்களுக்கு 10,000 அடுக்குமாடி வீடுகள்
சென்னை:
![]() |
சென்னையில் சுனாமியால் வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் 10,000 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.
எண்ணூரில் ஆரம்பித்து திருவான்மியூர் வரை கடலோரங்களில் இருந்த மீனவர் குப்பங்களில் 17,800 வீடுகள் கடல் அலைகளுக்குஇரையாகிவிட்டன.
இதையடுத்து கடலோரத்தில் இருந்து தள்ளியிருக்கும் பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 10,000 வீடுகள் கட்டி இவர்களுக்குவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹால், சமையல் அறை, குளியல்-கழிப்பறை வசதிகளுடன் ஒவ்வொரு வீடும் 225 சதுர அடியில்கட்டப்படவுள்ளது.
இந்தப் பணிக்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்படவுள்ளது என குடிசை மாற்று வாரிய இயக்குனர் அம்புஜ் சர்மா தெரிவித்தார்.
இதே போல நாகப்பட்டிணத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்ட இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாக அம் மாவட்டகலெக்டர் ரமேஷ்சந்த் மீனா தெரிவித்தார்.
பிரதமர் நாளை சென்னை வருகை:
இதற்கிடையே நாளை பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வருகிறார். முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன்சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்கும் சிங், மாலையில் ராஜ்பவனில் இரு மாநில முதல்வர்களையும்சந்திக்கிறார்.
சனிக்கிழமை காலை அவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானை பார்வையிட போர்ட்பிளேர் செல்கிறார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications