ஜாமீன் தந்தால் மடத்து பக்கமே போக மாட்டேன்: ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jayendrar சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

இந்த ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி லஹோத்தி தலைமையில் நீதிபதிமாத்தூர், நீதிபதி நோயெல்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதனை விசாரித்தது.

தமிழக போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் கே.டி.எஸ். துல்சியும், ஜெயேந்திரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நரிமனும் ஆஜராயினர்.

அப்போது இந்தக் கொலையில் ஜெயேந்திரருக்கு தொடர்பிருப்பதற்கான நேரடியான ஆதரங்களை, சாட்சிகளைஒப்படைக்கும்படி நீதிபதிகள் கோரினர்.

ஆனால், நீதிபதிகள் கேட்ட மாதிரி நேரடி ஆதாரங்கள் எதையும் விளக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் துல்சி தடுமாறினார்.

இந்தக் கொலையில் ஜெயேந்திரரை சம்பந்தப்படுத்தும் நேரடி சாட்சி வேறு என்ன இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கேட்டநீதிபதிகள் வழக்கை இன்றும் விசாரித்தனர்.

அப்போது ஜெயேந்திரரின் வழக்கறிஞர் நரிமன் பேசுகையில், கொலையாளிகளுக்கு ஐசிஐசிஐ உள்பட 3 வங்கிகளில் இருந்து ரூ.50 லட்சம் எடுத்துத் தந்ததாக போலீஸார் கூறினர். பின்னர் ஒரு நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த ரூ. 50 லட்சம் பணத்தைஎடுத்து தனது அறையில் வைத்திருந்து, பின்னர் அதைத் தான் கொலையாளிகளுக்குத் தந்தார் என்றனர்.

ஆனால், இந்த நில விற்பனை மூலம் கிடைத்த பணம் மே மாதம் 7ம் தேதியே வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது.போலீசார் கூறுவதைப் போல அதை ஜெயேந்திரர் தனது அறையில் வைத்திருக்கவில்லை. அதற்கான ஆதாரம் இதோ (மே 7ம்தேதி இரு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைத் தந்தார்).

சங்கரராமன் கொலை நடந்தது செப்டம்பர் மாதத்தில். அப்போது பெரிய அளவில் எந்தப் பணமும் மடத்தால்எடுக்கப்படவில்லை. கொலையாளிகளுக்கோ மற்ற யாருக்குமோ கொடுக்கப்படவில்லை. போலீசார் தான் மாற்றி மாற்றி பேசிவருகின்றனர்.

அதே நேரத்தில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், இந்த வழக்கில் போலீஸார் விசாரணையை முடியும் வரைஜெயேந்திரர் மடத்திற்கு செல்ல மாட்டார். இதற்கான உறுதி மொழியைத் தர அவர் தயார்.

ஜாமீனில் வெளியே வந்தால் மடத்தில் உள்ள சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று போலீசார் கூறுகின்றன. நல்ல வேளைஇளையவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் அவரே மடத்தின் அன்றாட பூஜைகளை கவனித்துக்கொள்கிறார். இதனால் ஜாமீன் கொடுத்தாலும் ஜெயேந்திரர் மடத்துக்கே வர மாட்டார்.

அதே போல ஜெயேந்திரர் எங்கும் தப்பியும் ஓடிவிட மாட்டார். உலகம் முழுக்க பரிச்சயமானவர் ஜெயேந்திரர். இதனால் அவர்நாட்டை விட்டெல்லாம் ஓடிவிட மாட்டார். போலீசார் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யும் வரை மடத்துப்பக்கமே அவர் போக மாட்டார் என்றார்.

இதையடுத்துப் பேசிய அரசு வழக்கறிஞர் துல்சி, கொலையான சங்கரராமன் தனது சாவுக்கு சில மாதம் முன் தனக்கு நெருக்கமானஒருவரிடம், எனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சங்கராச்சாரியார் தான் பொறுப்பு என்று கூறியிருக்கிறார். இதை மரணவாக்குமூலமாக ஏற்க முடியும். இதன் அடிப்படையில் கொலைக்கு முக்கியக் காரணமே ஜெயேந்திரர் தான் என்பது உறுதியாகிறது.இதனால் அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார்.

அப்போது இடைமறித்த நீதிபதிகள், இந்த மரண வாக்குமூலத்தை போலீசிடம் சங்கரராமன் கொடுத்தாரா என்று கேட்டனர்.அதற்கு இல்லை என்று பதிலளித்தார் வழக்கறிஞர் துல்சி. அவர் தொடர்ந்து பேசுகையில், இந்தக் கொலை வழக்கில் முக்கியசாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நபரிடம் சங்கரராமன் கூறியது தான் இந்த விவரம் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+