தீராத காங். கோஷ்டிப் பூசல்
குருவாயூர்:
தமிழ்நாடே சுனாமி சோகத்திலிருந்து இன்னும் முழுமையாக விலகாத நிலையில், காங்கிரஸ் கட்சியில் வழக்கம் போல கோஷ்டிப்பூசல் நடந்து கொண்டுதான் உள்ளது.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் டாக்டர் காயத்ரி தேவி என்பவர் நியமிக்கப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசனிடம் ஆலோசனை கேட்காமல் கட்சி மேலிடமே காயத்ரி தேவியை தலைவர் பதவியில் நியமித்து விட்டதாகக்கூறப்படுகிறது.
சுனாமி பாதிப்புப் பணிகளை மகளிர் காங்கிரஸார் தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவசர கதியில் காயத்ரிதேவி அப்பதவியில் நியமிக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் காரணம் கூறப்பட்டது. காயத்ரி தேவியின் நியமனம் காங்கிரஸ்பெண் பிரமுகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் பரிந்துரையின் பேரில்தான் காயத்ரி தலைவர் பதவியில்அமர்த்தப்பட்டுள்ளார் என்று அனைவரும் பொறுமுகிறார்கள்.
இந் நிலையில் தெரியாத்தனமாக சென்னைக்கு வந்த தமிழக மகளிர் காங்கிரஸின் அகில இந்திய பொறுப்பாளரான கமலாக்ஷிசர்மாவை ஏராளமான காங்கிரஸ் பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பெண்களின் இந்த திடீர் போராட்டத்தால்சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், இளங்கோவன் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்புகைகோர்த்த நிலையில் கோஷ்டிப் பூசல் வேறொரு ரூபத்தில் கிளம்பியுள்ளது. சுனாமியை விட மிகப் பயங்கரமானது காங்கிரஸ்கோஷ்டிப் பூசல் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications
