குடும்பமே தற்கொலை: அழுகிய நிலையில் 8 உடல்கள் மீட்பு!

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கொத்தனார் வேலை பார்த்து வந்தவர் அம்பலவாணன் (வயது 50), அவரது மனைவி தாரணி (45). இவர்களுக்கு மோகனா (24),தேன்மொழி (19), மேனகா (18), சரஸ்வதி (15), தீபா (12), ஆறுமுகம் (10) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து நேற்று பெரும் துர் நாற்றம் வீசியது. வீடு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பூட்டப்பட்டே இருந்தது.இதையடுத்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக விரைந்து வந்து அம்பலவாணனின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அப்போது 8 பேரும் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். அவர்களது உடல்கள் ஊதிப் போய், மிகவும் அழுகிக் கிடந்தன. வீட்டுக்குள்காளி சிலைக்கு பூஜை செய்யப்பட்டிருந்தது.

6 நாட்களுக்கு முன் பூஜை செய்துவிட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

கடைசியாக 8 பேரையும் புத்தாண்டு தினத்தின்போதுதான் அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு அவர்களை யாரும்பார்க்கவில்லை.

அம்பலவாணன் குடும்பத்தினருக்கு நிறைய கடன்கள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர்குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+