ஜெயேந்திரருடன் சு.சுவாமி சந்திப்பு: பாக். மீது பாய்ச்சல்
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று சந்தித்து பேசினார்.
சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது முதல் தமிழக அரசுக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குஎதிராகவும் சுப்பிரமணியம் சுவாமி குரல் கொடுத்து வருகிறார்.
இந் நிலையில் வேலூர் சிறையில் ஜெயேந்திரரை இன்று அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்து மதத்தை கேவலப்படுத்தவும், துவாரக மடத்தின் சொரூபானந்த சங்கராச்சாரியாரை இந்து மதத்தின் தலைவராக்கவும் தான்ஜெயேந்திரரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கைதில் சர்வதேச சதி உள்ளது. இதில் சோனியாவிற்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த விஷயத்தில் சர்வதேச அளவில் 7 பேர் சோனியாவிற்கு ஆலோசகர்களாக செயல்பட்டுள்ளனர். அதில் 2 பேர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐஉளவாளிகள். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பணம் சோனியாவிடம் உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இந்த கைது நடவடிக்கைக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும் என்படியே காரில்ஏறிப் பறந்தார் சுவாமி.












Click it and Unblock the Notifications