நாகை: மக்களோடு மக்களாகி விட்ட ராணுவத்தினர்
நாகப்பட்டினம்:
![]() |
பெங்களூரில் இருந்து மெட்ராஸ் என்ஜீனியரிங் குரூப் ராணுவத்தினர் நாகப்பட்டினத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களை சற்று அந்நியமாகவே பார்த்தனர்.
ஆனால், பிணங்களை மீட்பது, சேதமடைந்த சாலைகள், படகுகளை சரிபார்ப்பது, குடிநீரை வழங்குவது என தங்களது அளப்பரியசேவையால் ராணுவத்தினர் இப்போது மக்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களாக மாறிவிட்டனர்.
இது குறித்து மேஜர் சிவா கூறுகையில்,
தொடக்கத்தில் இப்பகுதி மக்கள் எங்களை அணுக கொஞ்சம் தயக்கம் காட்டினர். ஆனால் எங்களது நிவாரணப் பகுதிகளால் அவர்களுக்குநெருக்கமானவர்களாக நாங்கள் மாறினோம். இப்போது அவர்களது படகுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளுக்காக எங்களைத் தேடிவருகின்றனர்.
நாங்கள் படகுகளை மட்டும் சரி செய்யவில்லை. மீனவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் கடலுக்கும் செல்கிறோம்.
கடல் கொந்தளிப்பில் நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி சாலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதை எங்களது வீரர்கள்தான்சரிப்படுத்தினர்.
மேலும் சென்னை ராணுவத்தினர் அனுப்பி வைத்த ஏராளமான அரிசி, பருப்பு, தேயிலை ஆகியவற்றை மக்களிடம் விநியோகித்துள்ளோம்.
இப்போது மக்களிடம் எங்களுக்கு நல்ல பெயர் உள்ளது. எந்தவிதமான உதவி இருந்தாலும் எங்களை நாடி வருகின்றனர். நாங்கள் இந்தஇடத்தை விட்டுப் போகும்போது, குறைந்தது 12 இளைஞர்கள் ராணுவத்திற்கு சேர முன்வந்தால் அதுவே எங்களுக்குக் கிடைத்தவெற்றியாகும் என்று கூறினார்.
அரசு நிவாரணப் பணிகள் முழு அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், ராணுவத்தினரின் பணிகள்பாராட்டிற்குரியவைதான்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications