பாலஸ்தீன அதிபர் தேர்தல்: அப்பாஸ் வெற்றி
ரமல்லா:
பாலஸ்தீன அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் மெஹ்மூத் அப்பாஸ் வெற்றி பெற்றுள்ளார்.
பாலஸ்தீன அதிபராக இருந்த யாசர் அராபத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்ததையடுத்து புதிய அதிபருக்காக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் 7 பேர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர். இருப்பினும் யாசர் அராபத்தின் கட்சியின் தற்போதைய தலைவரும், முன்னாள்பிரதமருமான அப்பாஸூக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது.
அதேபோல் 66.3 சதவீத ஓட்டுக்கள் பெற்று அப்பாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தாக சுயேட்சை வேட்பாளர் முஸ்தபா பர்குதி19.7 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்கள் அனைவரும் 4 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுக்களையே பெற்றுள்ளனர்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தனது ஆதரவாளர்கள் முன்பு உரையாற்றிய அப்பாஸ்,
சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டிய கடினமான பணி நம்முன் உள்ளது. நமது மக்களுக்கு நல்ல வாழ்க்கை, பாதுகாப்புவழங்க வேண்டியிருக்கிறது. சிறையில் இருக்கும் நமது நாட்டினரை விடுதலை செய்ய வேண்டிய பணியும் இருக்கிறது.
எனது இந்த வெற்றியை யாசர் அராபத் மற்றும் இஸ்ரேலுடனான போரில் உயிரிழந்த நமது மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றுகூறினார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications