ஜெ. பதவி விலக வேண்டும்: பிரமோத் மகாஜன்
மைசூர்:
ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதால் முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றுபாஜக பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. இந்தவழக்கில் ஜெயேந்திரருக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வந்த தமிழக அரசு அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யத் தவறிவிட்டது.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் தொடக்கம்முதலே பாஜக ஜெயேந்திரருக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இந்த வழக்கு சுதந்திரமாக நடைபெற வேண்டுமானால்,தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமென பாஜக கூறிவருகிறது.
இப்போது ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதன் மூலம் எங்கள் கோரிக்கை சரியானதே என்பதுநிரூபணமாகியுள்ளது. தமிழகத்தில் எந்த கட்சியுடனும் பாஜக இப்போது கூட்டணி வைக்கவில்லை என்று தெரிவித்தார்.
வெங்கையா பேட்டி:
இதற்கிடையே விஜயேந்திரர் கைது குறித்து பாஜக முன்னாள் தலைவர் வெங்கையாநாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விடுதலையாவதை அரசால் தடுக்கமுடியவில்லை. அதனால்தான் விஜேயந்திரரை கைது செய்துள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
இதன் மூலம் சங்கர மடத்திற்கு களங்கம் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. அந்த முயற்சி பலிக்காது. விரைவில் உண்மைவெளிவரும். அப்போது சங்கரமடத்திற்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப்படும் என்று கூறினார்.
சிபிஐ விசாரணை:
இந் நிலையில் பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, சங்கரராமன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றுநிருபர்களிடம் கூறினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications