ஜெயேந்திரர் விடுதலை: கலவையில் தங்குகிறார்
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் இன்று மாலை 4.30 மணிக்கு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஆற்காடு அருகே உள்ள கலவை என்றகிராமத்தில் ஜெயேந்திரர் தங்க முடிவெடுத்திருக்கிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இன்று காலை 10.45 மணிக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரங்கராஜூவிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல்வழங்கப்பட்டது.
மன்னார்குடியைச் சேர்ந்த சங்கரமட பக்தர் ராமச்சந்திரனும், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிர்வாகி பம்மல் விசுவநாதனும்ஜெயேந்திரருக்காக தலா ரூ.50,000 ஜாமீன் பத்திரங்களை வழங்கினர்.
ஜெயேந்திரரின் பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார், இந்த பாஸ்போர்ட்உண்மையானதுதானா என சரிபார்க்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து பாஸ்போர்ட் சரியானதுதானா என்பதை ஆய்வு செய்ய 2வது நீதிமன்றத்திற்கு நீதிபதி அனுப்பினார். பின்னர்ஜெயேந்திரருக்காக இருவர் அளித்த ஜாமீனை ஏற்றுக்கொண்டார். ஜெயேந்திரரை விடுதலை செய்வதற்கான உத்தரவு ஒன்றையும் நீதிபதிரங்கராஜூ பிறப்பித்தார்.
இந்த உத்தரவுடன் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் பகல் 11.30 மணிக்கு வேலூர் சிறைக்குப் புறப்பட்டு சென்றனர். அங்கு சிறைஅதிகாரிகளை சந்தித்து உத்தரவு நகலை வழங்குகினர்.
இதனையடுத்து மாலை 4.30 மணிக்கு ஜெயேந்திரர் விடுதலையானார். அவரை பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் , திருநாவுக்கரசர்,வி.எச்.பி. தலைவர் அசேசாக் சிங்கால் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஏராளமான பக்தர்கள் அவரது காலில்விழுந்து வணங்கினர்.
ஜெயேந்திரர் மெளன விரதம் கடைப்பிடிப்பதால் நிருபர்களிடம் பேசமாட்டார் என்று காஞ்சி மட ஊழியர் தெரிவித்தார். பின்னர் காஞ்சிமடத்திற்குச் சொந்தமான மஞ்சள் நிற வேனில் ஏறினார்.
விடுதலைக்குப் பின் ஜெயேந்திரர் சங்கர மடத்துக்குள் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர் வேலூர்மாவட்டத்தில் ஆற்காடு அருகில் செய்யாறு போகும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் இருக்கும் கலவை கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கு சந்திரமெளலீஸ்வரர் பூஜையை இன்று மாலை தொடங்குகிறார். பூஜை செய்வதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் காஞ்சிசங்கர மடத்தில் இருந்து கலவைக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கலவையில் சங்கர மடத்துக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. காஞ்சி மகாப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள்அடிக்கடி இங்கு வந்து தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications