கடலூர் மக்களுக்கு கை கொடுக்கும் சின்னப்பிள்ளை!
கடலூர்:
![]() |
கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை தனது குழுவினருடன் சென்றுஉதவிகள் செய்து வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை களஞ்சியம் என்ற சிறு சேமிப்பு இயக்கத்தை நிறுவியவர், மத்திய அரசின் சக்தி புரஸ்கார் விருதைஅப்போதைய பிரதமர் வாஜ்பாயிடமிருந்து பெற்றவர்.
சின்னப் பிள்ளையின் சேவையைக் கேட்டு பிரமித்த வாஜ்பாய் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அத்தகைய பெருமைபெற்ற சின்னப்பிள்ளை கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தற்போதும முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்துவருகிறார்.
அவர் கூறுகையில், எங்களது களஞ்சியம் இயக்க அறக்கட்டளை மூலம் கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை ஆகிய கடலோரபகுதிகளில் உள்ள 10 கிராமங்களில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம்.
களஞ்சியம் இயக்கத்தைச் சேர்ந்த 15 பெண்கள் என்னுடன் வந்துள்ளனர். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் தலா ரூ. 200 ஒதுக்கிரூ. 4.4 கோடியை திரட்டவுள்ளோம். அந்த நிதியை சுனாமி நிவாரணத்துக்காக செலவிட இருக்கிறோம்.
இந்த ரூ. 4.4 கோடியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்த மீண்டும் அவற்றை வாழத் தகுந்த இடமாக மாற்றுவதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தரவுள்ளோம்.
எங்களால் முடிந்த அனைத்து சேவைகளையும் இப்பகுதி மக்களுக்காக செய்யவுள்ளோம் என்றார் சின்னப்பிள்ளை.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்













Click it and Unblock the Notifications