பூக்கட்டும் புதுவாழ்வு: ஜெ பொங்கல் வாழ்த்து
சென்னை:
பொங்கட்டும் பொங்கல், பூக்கட்டும் புதுவாழ்வு, மங்கலப் பொங்கல் நாள் மகிழ்ச்சிதனைப் பெருக்கட்டும் என முதல்வர் ஜெயலலிதா தனதுவாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி:
மங்கலப் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற வள்ளுவப் பெருமானின் வாக்குக்கு இணங்க, இந்த உலகம் உழவர் பெருமக்களின் பின் செல்கின்றது.அந்த உழவர் பெருமக்கள் தங்கள் உழைப்பின் பயனைப் பெற்று உவகை அடையும் நாள் இந்த பொங்கல் திருநாள்.
இயற்கைப் பேரிடர் கடலோரத் தமிழகத்தை சிதைத்து விட்ட வேளையிலே பிறந்திருக்கிறது இந்தத் தைத் திங்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். பிறக்கின்ற தைத் திருநாள் தமிழர்க்குப் புதுவாழ்வு அளிக்கின்ற திருநாளாக மலரட்டும். புதிய நம்பிக்கையைஅளிக்கின்ற திருநாளாக மலரட்டும்.
இயற்கைக்கு அஞ்சி வாழாமல் இயற்கையை வென்று வாழ்வதில்தான் மானுடத்தின் வெற்றி அமைந்திருக்கின்றது. மனித குல வரலாறுநமக்குக் கற்றுத் தருகின்ற மகத்தான பாடம் இதுதான். எனவே நம்பிக்கை கொள்வோம், இயற்கைப் பேரிடரான சுனாமியால் நிலை குலைந்தமக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப ஏற்ற பணி புரிவோம்.
பொங்கட்டும் பொங்கல், பூக்கட்டும் புதுவாழ்வு, மங்கலப் பொங்கல் நாள் மகிழ்ச்சிதனைப் பெருக்கட்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications