சுனாமி நிவாரண துணியில் சிக்கி உயிர் விட்ட சிறுவன்
பொறையாறு:
![]() |
சுனாமியால் தாக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட் துணிக் குவியலுக்குள் சிக்கிய 10 வயது சிறுவன் பரிதாபமாகப் பலியானான்.
சுனாமி தாக்குதலுக்குப் பின் கடலோர மாவட்டங்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும்நிவாரணப் பொருட்கள் லாரிகளில் வந்து குவிந்தன. இதில் பழைய துணிகளும் அடக்கம்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தத் துணிகளை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் லாரிகளில் பழையதுணிகளைக் கொண்டு வந்தவர்கள் அதை அப்படியே சாலையொரங்களில் குவித்துப் போட்டுவிட்டுச் சென்றனர்.
அப்படி மலைபோல குவிந்து கிடக்கும் துணிக் குவியல்களில் சிறுவர்கள் ஏறி விளையாடி வருகின்றனர். நாகூரில் 6 நாட்களுக்கு முன்இப்படி ஒரு துணிக் குவியலில் ஏறி சில சிறுவர்கள் விளையாடினர்.
அப்போது தஸ்தகீர் மாலிக் என்ற 10 வயது சிறுவன் துணிக்குள் புதைந்துள்ளான். முகம் முழுவதும் துணிகளுக்குள் புதைந்துவிட மூச்சுவிடமுடியாமல் மயக்கமடைந்திருக்கிறான். பின்னர் அப்படியே உயிர் விட்டுள்ளான்.
இதை யாரும் கவனிக்கவில்லை. கடந்த 7ம் தேதி முதல் தங்களது மகனைக் காணவில்லை என பெற்றோர்கள் புகார் தந்தனர்.
இந் நிலையில் இந்தத் துணிக் குவியலை அப்புறப்படுத்த நகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை அங்கு வந்தனர். அப்போதுகுவியலுக்குள்ளே தஸ்தகீரின் பிணம் கிடந்தது.
பழைய துணி ஏலம்:
இதற்கிடையே நாகை மாவட்டத்தில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரங்களில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் பழைய துணிகளைஏலம் விட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்தத் துணி ஆங்காங்கே ஏலம் விடப்பட்டு வருகிறது.
டன் துணி ரூ. 13,000 க்கு ஏலம் போகிறது. இதன்மூலம் கிடைக்கும் பணம் முதல்வரின் சுனாமி நிவாரண நிதியில் சேர்க்கப்படவுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications