ஜெயேந்திரரை சந்திக்க கலவை மடத்தில் குவியும் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

கலவை:

jayendrarகலவை மடத்தில் தங்கியுள்ள சங்கராச்சாரியாரைச் சந்திக்க ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

மடத்தின் வங்கிக் கணக்குகளை அரசு முடக்கிவிட்டதால், அன்னதானம் உள்ளிட்ட பணிகளுக்காக பக்தர்கள் அரிசி உள்பட பல்வேறுபொருட்களை கலவை மடத்தில் கொண்டு வந்து குவித்து வருகின்றனர்.

கடந்த 11ம் தேதி முதல் 5 நாட்களாக இங்கு முகாமிட்டுள்ள ஜெயேந்திரர் காலையில் மடத்துக்குள்ளேயே வாக்கிங் செல்கிறார். வழக்கமானபூஜைகளை நடத்துகிறார்.

ஆனாலும் தனது மெளன விரதத்தை அவர் இன்னும் கலைக்கவில்லை என அவரை சந்தித்துவிட்டு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே ஜெயேந்திரரைச் சந்திக்க கர்நாடக மாநிலம் ஸ்வர்ணவல்லி மடத்தைச் சேர்ந்த கங்காதேரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கலவைமடத்துக்கு நேற்று வந்தார். இன்றும் அவர் அங்கேயே தங்கி பூஜைகளை நடத்தி வருகிறார்.

ஜெயலில் இருந்து வெளியே வந்த ஜெயேந்திரரை சந்திக்க வந்த முதல் வேற்று மட பீடாதிபதி இவர் தான். ஜெயேந்திரரின் சிஷ்யரானகங்காதேந்திர ஸ்வாமிகள், அவரிடம் தான் தீட்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+