சுனாமி பீதி: வெறிச்சோடிய கடற்கரைகள்
சென்னை:
சுனாமி ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் மக்கள் மனதிலிருந்து அகலாததால், சென்னையில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் காணும்பொங்கலையொட்டி வழக்கமாக காணப்படும் மக்கள் கூட்டத்தைக் காண முடியவில்லை.
சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுஇடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சென்னை நகரில் வழக்கமாக கடற்கரைகளில் லட்சக்கணக்கானோர் கூடுவர். ஆனால் இந்த முறை சுனாமி சோகம் மற்றும் பீதிகாரணமாக மெரீனா, பெசன்ட் நகர், சாந்தோம் என எந்தக் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை.
மாறாக, திரையரங்குகள், தீம் பார்க்குகள், கோயில்கள் மற்ற பொது இடங்களுக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இதனால்கடற்கரைகள் அனைத்தும் கூட்டம் அதிகமாக இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
பொது இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரீனா கடலில் குளிக்க பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் மட்டும் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு கடலுக்கு வெகுஅருகே யாரும் செல்லக் கூடாது, கடலில் குளிக்கக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுக்கு அருகே செல்வதைத் தடுக்கும் வகையில் மரக் கட்டைகளால் ஆன தடுப்பும் போடப்பட்டுள்ளது. சுனாமிமுன்னெச்சரிக்கை மற்றும் கடலில் யாரும் இழுத்துச் செல்லப்பட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் இந்தத் தடையைவிதித்துள்ளனர்.
இதேபோல பெசன்ட்நகர் கடற்கரை, சாந்தோம் கடற்கரை ஆகிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாமல்லபுரத்திலும் கடலில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications