மகிழ்ச்சியாய் இருக்கிறார் ஜெயேந்திரர்: தயானந்த சரஸ்வதி
கலவை:
கலவை மடத்தில் ஜெயேந்திரர் மகிழ்ச்சியாக இருப்பதாக அவரைச் சந்தித்த தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் ஆற்காடு அருகே கலவையில் தங்கியுள்ளார். அவரை சந்திக்க கோவை தயானந்த சரஸ்வதிசுவாமிகள் வந்தார். ஜெயேந்திரருடன் ஒன்றரை மணி நேரம் பேசிய பின் வெளியில் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஜெயேந்திரர் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் மீதான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து கருத்துஎதுவும் சொல்லக் கூடாது என்றார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சொனாக் கிளினீங் என்பவர் ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசும்போது,
ஜெயேந்திரர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். அவர் கொலை செய்யக் கூடியவர் அல்ல. விரைவில் இந்த வழக்கில் இருந்து அவர்விடுதலையாவார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஜெயேந்திரர் பக்தர்கள் அனைவரும் ஜெயேந்திரர் விடுதலைக்காக பாடுபடுவோம் என்றார்.
இதற்கிடையே ஜெயேந்திரரை சந்திப்பதற்தகாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் இன்று கலவை வருகிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழு ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், சங்கரமடத்தை தமிழக அரசு எடுத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து கூறி வருகிறது.
இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் இன்று கலவை வந்து ஜெயேந்திரரை சந்தித்துப் பேசுகிறார். அப்போது சங்கர மடத்தை அரசுகையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜெயேந்திரருடன் சுதர்சன் விவாதிக்கவிருப்பதாக ஆர்.எஸ். எஸ்.செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதற்கிடையே கலவைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications