விஜயேந்திரர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றம்வருகிற 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 10ம் தேதி விஜயேந்திரரை தனிப்படைப் போலீசார் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். பின்பு விஜயேந்திரர் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி கடந்த 12ம் தேதி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை 17ம் தேதி (இன்று) நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
அதன்படி விஜயேந்திரர் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் துல்சி நீதிமன்றத்தில்ஆஜராகததால் மனு மீதான விசாரணையை வருகிற 19ம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
போலீஸ் காவல்:
இந் நிலையில் விஜயேந்திரர், ரகு ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனிப்படைபோலீஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications