கிழிக்கப்பட்ட பக்கங்கள்: துருவப்பட்ட அய்யர்
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தின் கணக்குப் புத்தகங்களில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டது குறித்து அதன் மேலாளர் சுந்தரேச அய்யரிடம் தனிப்படைபோலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் அய்யர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 20ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட சுந்தரேச அய்யரிடம் நேற்று மாலை முதல் காட்டு பங்களாவில் வைத்துவிசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரது போலீஸ் காவல் முடிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட சுந்தரசே அய்யர் மீது, சங்கர மடக் கணக்குகளை திருத்தி எழுதியதாகவும் ஒருபுகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கணக்காளர் காலடி விஸ்வநாத அய்யரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் விஸ்வநாத அய்யரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியபோது, கணக்குப் புத்தகத்தில் சில பக்கங்கள்கிழிக்கப்பட்டிருந்தது குறத்து கேள்விகள் கேட்கப்பட்டன.
எதற்காக அவை கிழிக்கப்பட்டன, அந்தப் பக்கங்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்து விசாரித்தனர்.
அப்போது, சுந்தரேச அய்யர் சொல்லித்தான் பக்கங்கள் கிழிக்கப்பட்டதாக காலடி விஸ்வநாத அய்யர் போட்டுக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சுந்தரேச அய்யரை நேற்று மாலை போலீஸ் காவலில் எடுத்த தனிப்படை போலீஸார் அவரை காட்டுப் பங்களாவில் வைத்துதொடர்ந்து விசாரித்தனர்.
பக்கங்கள் கிழிக்கப்பட்டது ஏன், அவற்றில் என்ன கணக்கு எழுதப்பட்டிருந்தது, எவ்வளவு தொகைக்கு கணக்கு எழுதப்பட்டிருந்தது என்பதுஉள்ளிட்ட தகவல்களைக் கேட்டு போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் சுந்தரசே அய்யரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 20ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அய்யர் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனு மீது இன்று நீதிபதி முருகேசன் விசாரணைநடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் இன்னும் நியமிக்கப்படவில்லை, அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில்விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.
கூலிப் படையினர் ஜாமீன் மனு:
இதே வழக்கில் கூலிப் படையைச் சேர்ந்த சின்னா என்ற ரஜினி உள்பட 6 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மனு இன்று நீதிபதி தணிகாச்சலம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 20ம் தேதிக்கு இந்த வழக்கைஒத்திவைத்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications