வந்தார் ஞானப்பிரசேந்திரர்: 3வது சங்கராச்சாரியாராக நியமனம்?
கலவை:
சங்கர மடத்துக்கு மூன்றாவது சங்கராச்சாரியாராக ஞானப்பிரசேந்திர சரஸ்வதி என்பவர் நியமிக்கப்படவுள்ளதாகத்தெரிகிறது. ஆனால், இதை மடம் மறுக்கிறது.
தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆடிட்டராகப் பணியாற்றிவந்தவர் திடீரென பக்தி மார்க்கத்துக்குத் திரும்பியவர்.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெயேந்திரரிடம் தீட்சை பெற்று கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பர்ணசாலைஅமைத்து வேதங்கள் படித்தும், பரப்பியும் வந்தவர்.
தனுர் மாசத்தில் இவர் சங்கர மடத்தில் தங்கியிருப்பது வழக்கம். ஆனால், ஜெயேந்திரரை போலீசார் கொலைவழக்கில் கைதான மறு நிமிடமே மடத்தை விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
இவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத சூழல் நிலவியது.
இப்போது விஜயேந்திரரும் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், தனது தீவிர பக்தரான ஞானப்பிரசேந்திரசரஸ்வதியை மூன்றாவது சங்கராச்சாரியாராக நியமிக்க ஜெயேந்திரர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு சங்கராச்சாரியார்களும் மடத்துக்குள் நுழைய முடியாத சூழல் உருவாகியிருப்பதால், மடத்தின் அன்றாடப்பணிகள், பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் வகையில் இவரை மூன்றாவது சங்கராச்சாரியாராக நியமிக்கஜெயேந்திரர் முடிவு செய்துள்ளார்.
மீடியாக்களின் பார்வையில் இருந்து விலகியே இருந்த ஞானப்பிரசேந்திரர் கலவைக்கு வந்து ஜெயேந்திரரைச்சந்தித்தார். இவர் எப்போது இங்கு வந்தார் என்று தெரியவில்லை.
ஆனால் இவர்தான் ஜெயேந்திரருக்கு தற்போது உதவியாக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன்உறுதிப்படுத்தினார்.
கலவைக்கு வந்து ஜெயேந்திரரைச் சந்தித்த சுதர்சன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஞானப்பிரசேந்திரர்இங்கிருப்பதாகச் சொன்னார்.
சங்கர மடத்தில் பூஜைகளை சங்கராச்சாரியார்கள் தான் செய்ய முடியும். அவை தடையின்றி நடக்கும் வகையில்புதிய சாமியாரை ஜெயேந்திரர்தான் வரவழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவரையே சங்கர மடத்தின் 3வது சங்கராச்சாரியாராக விரைவில் நியமிக்கலாம் என்றும் தெரிகிறது.
மறுக்கிறது மடம்!
ஆனால் இதை சங்கர மடத்தின் புதிய மேலாளர் பொள்ளாச்சி மகாதவே அய்யர் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், புதிய சங்கராச்சாரியாரை நியமிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரரின் உத்தரவின் பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இப்போதைக்கு இவ்வளவுதான் கூறமுடியும் என்றார் அய்யர்.
இதற்கிடையே, சுதர்சன் அளித்த பேட்டியின்போது 3வது சங்கராச்சாரியார் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்தெரிவிக்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூறியுள்ளது.
இந்த மறுப்புகள் ஒரு பக்கம் வந்தாலும், ஞானப்பிரசேந்திரரை மடாதிபதியாக்கும் முயற்சிகள் ஒரு பக்கம்நடப்பதாகவே தெரிகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications