அப்பு மீதான வழக்கை விசாரிக்க தடை இல்லை!
சென்னை:
மார்வாடியை மிரட்டி அவர் மீது வெடிகுண்டு வீசியதாக அப்பு மீது தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க தடை இல்லை என்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பிரேம் சந்த். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை தரம்சந்த் என்பவருக்கு ரூ. 1.75 கோடிக்கு விற்றார்.ஆனால் தரம்சந்த் முழுப் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்ற முயற்சித்துள்ளார்.
நிலத்தை விற்ற பிரேம் சந்த், மீதப் பணத்தைக் கொடுக்குமாறு தரம்சந்தை கேட்டுள்ளார். இதையடுத்து தரம்சந்த், அப்புவின் உதவியைநாடியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பு பிரேம்சந்த்தை மிரட்டியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் அவர் மீது வெடிகுண்டு வீசிக் கொல்லவும் முயற்சித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு வெடிகுண்டுகள் தொடர்பானவழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கக் கோரி அப்பு தொடர்ந்த மனுவின் பேரில் வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருந்தது. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்கலாம் எனஉத்தரவிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications