சுனாமி: மத்திய அரசு ரூ.2,731 கோடி நிதி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

The scene in Coastal area

சுனாமி பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.2,731.04 கோடி நிதியை முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் கூறியதாவது:

இந்த நிவாரண நிதி ஆந்திரா, தமிழ்நாடு,கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்குத் தரப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குவழங்கப்பட வேண்டிய நிதி குறித்து ஆராய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் நாளை அங்கு செல்கிறார்.

மொத்த தொகையான ரூ.2.731 கோடியில் ரூ.1,093 கோடி மீனவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. உடனடி தேவைக்காக ரூ.861.82வழங்கப்படும். படகுகளை இழந்த மீனவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும். சேதமடைந்த மீன்பிடி துறைமுகங்கள் பழுதுபார்க்கப்படும்.

கட்டுமரங்களை இழந்த மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.32,000 வழங்கப்படும். பைபர்கிளாஸ் படகுகளை இழந்த மீனவர்களுக்குரூ.1.5 லட்சம் வழங்கப்படும். இதில் 35 சதவீதம மானியமாகவும். மீதித் தொகை 7 சதவீத வட்டியுடன் வங்கிக் கடனாகவும் தரப்படும்.

7 வருடத்தில் இந்த கடனை அடைக்க வேண்டும். ஒன்றரை வருடத்தில் அடைப்பவர்களுக்கு வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.கட்டுமரத்தை இழந்து, பைபர் கிளாஸ் படகுகளை வாங்க விரும்பும் மீனவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

இயந்திரப்படகுகளை இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும். இதில் 35 சதவீதம் மானியமாகவும், மீதித் தொகை கடனாகவும்தரப்படும். இயந்திரப் படகுகளை பழுதுபார்க்க 65 சதவீத மானியமும் (ரூ.3 லட்சம்), மற்ற படகுகளை பழுது பார்க்க ரூ.10,000 மானியமும்வழங்கப்படும்.

மீன்பிடித் துறைமுகங்களை பழுதுபார்க்க ரூ.22.13 கோடி தரப்படும்.

சுனாமி தாக்குதலில் 1.70,500 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவை அனைத்தும் ரூ.752.30 கோடி செலவில் முற்றிலும் இலவசமாக கட்டித்தரப்படும்.

இரண்டாம் கட்ட நிவாரண நிதி வழங்கப்படும்போது விவசாய நிலங்கள் சேதமடைந்தது கருத்தில் கொள்ளப்படும்.

நிவாரணப் பணிகளில் பணம் ஒரு தடையாக இருக்காது. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வரும் கோரிக்கைகளை மத்திய அரசுபரிசீலிக்கும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+