சங்கரராமன் ஒன்னாம் நம்பர் பிளாக்மெயிலர்: கதிரவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Kathiravan சங்கரராமன் ஒன்றும் ஊருக்காக வாழ்ந்த தியாகி அல்ல. ஒன்னாம் நம்பர் பிளாக்மெயிலர். தனது மனைவிக்கே தெரியாமல் இன்னொருபெண்ணுடன் வாழ்ந்து அவர் மூலம் குழந்தையும் பெற்றவர் என்று கூலிப் படையைச் சேர்ந்த கதிரவன் பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கூலிப் படையில் இடம் பெற்றிருந்தவர்களில் முக்கியமானவர் கதிரவன். சிறந்தவாலிபால் வீரரான கதிரவன் காலப் போக்கில் ரவுடியானவர், அப்புவின் கூலிப் படையில் முக்கிய ஆள்.

வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு கதிரவன் அளித்துள்ள பேட்டியில் சங்கரராமன் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரதுபேட்டியின் சுருக்கம்:

சங்கரராமன் உடல் அடக்கத்துக்குக் கூட நாங்கதான் நிதி உதவி செய்தோம் என்று கூடுதல் எஸ்.பி. சக்திவேல் கூறுகிறார். ஏதோ சங்கரராமன்ஊருக்காக வாழ்ந்த தியாகி என்பது போல அவரது பேச்சு உள்ளது. உண்மையில் சங்கரராமன் ஒன்னாம் நம்பர் பிளாக்மெயிலர்.

ஊரில் எவ கூட எவன் சுத்துறான்று பார்த்து, அவனை மிரட்டி காசு புடுங்குற ஆள். தன் மனைவிக்கே தெரியாமல் இன்னொருபெண்ணோட தொடர்பு வெச்சு அவர் மூலமாக ஒரு குழந்தையும் பெத்தவர். இதுல அவரு மத்தவங்களுக்கு மட்டும் உலக நியாயம்பேசுவாரு.

இந்தக் கொலையை நாங்க செய்தோமா, இல்லையா என்பது இப்போது முக்கியமல்ல. ஆனால் நிரபராதி என்று நாங்கள் வெளிய வரத்தான்போகிறோம்.

சங்கரராமன் வழக்கைப் பொருத்தவரை மொத்தம் 25 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். உண்மையில் 4 பேர்தான் உண்மையானகுற்றவாளிகள், மற்ற 21 பேரும் நிரபராதிகள். அந்த நான்கு பேர் யார் என்பதை இப்போதைக்கு நான் சொல்ல மாட்டேன். இந்தவிஷயங்கள்தான் நான் நிரபராதி என்பதை நிரூபிக்க என்னிடம் உள்ள ஆதாரம். எனவே உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைஇப்போது நான் கூற மாட்டேன்.

வழக்கு விசாரணை ஆரம்பிக்கும்போது நீதிமன்றத்தில் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைப்பேன். பணம் கொடுத்தால் மட்டும் இந்தக்கொலை நடக்கவில்லை. அதை என்னால் உறுதியாக கூற முடியும்.

போலீஸார் சொல்லும் போலி குற்றவாளிகளில் ஒருவரான பழனி என்பவரை சென்னையில் வைச்சு போலீஸார் பிடித்துள்ளார்கள். அவரைநடுக்கடலுக்குக் கூட்டிப் போய் வயிற்றில் கல்லைக் கட்டி கடலில் இறக்கியுள்ளனர். சுறா மீன் வந்து உன்னைக் காலி பண்ணட்டும்னு சொல்லிசொல்லியே பத்து நிமிடத்துக்கொரு தடவை கடல்ல இறக்கி எடுத்திருக்காங்க.

இப்படியே ஆறு மணி நிேரம் சித்திரவதை செய்துள்ளார்கள். கடைசியா வேறு வழியில்லாம போலீஸ் சொன்னபடி பழனி ஒப்புக்கொண்டுள்ளார்.

கோர்ட்டில் நாங்கள் கூறியது போலீஸ் கூறியபடி கொடுக்கப்பட்ட வாக்குமூலம், அதற்குப் பெயர் ஒப்புதல் வாக்குமூலம் இல்லை.

அப்பு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறுவதெல்லாம் ஜோக். அவர் விளையாட்டா ஒரு வார்த்தை சொன்னா கண்ணைமூடிக்கிட்டு கிணத்துல குதிக்கிற ஆளு நான்.

நானும், ரவிசுப்ரமணியம் சேர்ந்துதான் இதை செய்ததாக எனது முதலாளி அப்பு போலீசில் சொன்னதாக கூறப்படுவதை நான்நம்பமாட்டேன். அவர் அப்படிக் கூறியிருக்க மாட்டார். ரவிசுப்ரமணியம் கூட வம்பாகத்தான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏகப்பட்ட சித்திரவதை செய்து, அவரை அரைப் பைத்தியமான நிலைக்குக் கொண்டு வந்த பிறகுதான் அவர் கைது செய்யப்பட்டதைவெளியில் காட்டியது போலீஸ்.

நான் இருக்கும் சென்னை மத்திய சிறையில் தான் விஜயேந்திரரும் இருக்கிறார். முதலில் எனக்கு பக்கத்து அறையில்தான் அவர் இருந்தார்.அப்போது நான் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களைக் கொடுத்தனுப்பினேன். அவர் வாங்க மறுத்துவிட்டார்.

சிறை தண்ணீர் பிடிக்காமல் குளிக்காமல் இருந்தார். கிணற்றுத் தண்ணீர்தான் வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்என்று கூறியுள்ளார் கதிரவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+