ஜார்ஜ் புஷ் 2வது முறையாக இன்று அதிபர் பதவி ஏற்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இன்று இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இதனையொட்டி அமெரிக்காவில் 3 நாள்கொண்டாட்டம் நடைபெறுகிறது.
அதிபராக புஷ் பதவியேற்பதையொட்டி அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு புஷ் மரியாதை செலுத்தினார். நேற்று வாணவேடிக்கைகளும், இசைநிகழ்ச்சிகளும் தொடங்கின. இன்று பதவியேற்கும் முன்பு அதிபர் புஷ் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பதவியேற்பு விழா முடிந்தபின்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தளிக்கிறார். விழாவையொட்டி பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மன்மோகனுடன் பேச்சு:
இந் நிலையில் சுனாமி பாதித்த நாடுகளுக்கு இந்தியா அளித்த உடனடி நிவாரண உதவிகளை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலாளர் ஸ்காட் மெக்கெல்லன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுனாமியால்பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா அளித்த உடனடி நிவாரண உதவிகள் குறித்து அமெரிக்காவின் பாராட்டுதலைத்தெரிவித்தார்.
இருதரப்பு உறவு வலுப்படும் வகையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உதவுவது குறித்துஇருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.
இருநாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதுகுறித்தும் ஆலோசனை நடத்தினர் என்று கூறினார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications