ஜெயேந்திரர்: போராட்டம் செய்த திருநாவுக்கரசர் கைது
சென்னை:
விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், சங்கராச்சாரியார்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும் திட்டமிட்டபடி சென்னை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு பாஜகவினர் கூடினர். முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக பொதுச் செயலாளர்குமாரவேலு, பாஜக பிரமுகர்கள் லட்சுமணன், வாழப்பாடி ராமசுகந்தன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
விஜயேந்திரரை விடுதலை செய், சங்கர மடத்தை அவமானப்படுத்தாதே, ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்துக்குமாற்று ஆகிய கோஷங்களை எழுப்பினார்கள். திருநாவுக்கரசர் பேசுகையில்,
சங்கர மடத்தை அவமானப்படுத்தும் விதமாகவே தமிழக அரசின் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜெயேந்திரர் மீதானகுற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரம் எதையும் தாக்கல் செய்யவில்லை என்று தமிழக அரசை உச்ச நீதிமன்றம்கண்டித்துள்ளது.
அதனால் தான் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறோம். மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மடத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதால்தான் வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோருகிறோம். மத்திய அரசுஇதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. சங்கர மடம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுமாறு மாநில அரசுக்குமத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
அப்போது போலீஸார் விரைந்து வந்து திருநாவுக்கரசர் உள்ளிட்ட 200 பேரைக் கைது செய்து, முத்தியால்பேட்டை காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications