கிருஸ்தவ நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: பெங்களூரில் சங் பரிவார் போராட்டம், கல்வீச்சு- பதற்றம்
பெங்களூர்:
பிரபல அமெரிக்க கிருஸ்துவ மத போதகர் பென்னி ஹின்னின் ஆசிர்வாதப் பெருவிழாவை எதிர்த்து பெங்களூரில் இன்று பலஇடங்களில் பா.ஜ.க, ஆர்எஎஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்பினர் கல்வீச்சு உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கினர்.
இன்று பந்த் நடத்த இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்ததால் நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலஇடங்களில் பஸ்கள் மீதும் கல்வீச்சு நடந்தது.
ஜக்கூர் விமான தளத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த கிருஸ்தவ ஆசிர்வாதப் பெருவிழா நடக்கிறது. இதில்லட்சக்கணக்கானவர்களை பாதிரியார் மதமாற்றம் செய்ய முயல்வதாகக் கூறி இந் நிகழ்ச்சிக்கு சங் பரிவார் அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றன.
நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க நீதிமன்றத்தையும் அணுகினர். ஆனால், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து நேற்று கடை, கடையாகச் சென்ற சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்கள் இன்று கடைகளைத் திறக்கக் கூடாதுஎன கூறிவிட்டுச் சென்றனர். இதையும் மீறி இன்று கடைகள் திறக்கப்பட்டால் பல இடங்களில் அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதனால் நகரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. பல இடங்களில் பஸ்கள் மீதும் கல்வீச்சு நடந்துள்ளது. சாலை மறியல்போராட்டத்தில் இறங்கிய பா.ஜ.க. தேசியச் செயலாளர் அனந்த்குமார் தலைமையிலான 15 பாஜக எம்எல்ஏக்களும்நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகள் தவிர தமிழகம், கேரளத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள்பெங்களூர் வரவுள்ளனர். இவர்கள் வரும் வாகனங்கள் மீதும் கல்வீச்சு நடக்கலாம் என்பதால் முக்கிய சாலைகளில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மத விழா நடக்கும் ஜக்கூரில் 6,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications