மடத்துக்கு திரும்ப ஜெயேந்திரருக்கு தடை நீங்கியது
காஞ்சி:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் ஜெயேந்திரர் சங்கர மடத்திற்குத் திரும்பதடை நீங்கியுள்ளது.
இந்த வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை மடத்துக்குச்செல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தது. இதனால் அவர் வேலூர் அருகே கலவையில் உள்ள காஞ்சி மடத்தில்தங்கியுள்ளார்.
இப்போது குற்றப் பத்திரிக்கை தாக்கலாகிவிட்டாதால் அவர் சங்கர மடத்திற்குத் திரும்பலாம். ஆனால், அவர் எப்போதுதிரும்புவார் என்று தெரியவில்லை.
இது குறித்து எஸ்பி பிரேம்குமாரிடம் கேட்டபோது, இந்த விஷயத்தில் நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது. எல்லாம்சட்டப்படி தான் நடக்கும் என்றார்.
கருத்து கூற சங்கர மடம் மறுப்பு:
இதற்கிடையே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து கூற சங்கர மட நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
நிருபர்கள் திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டும், நிர்வாகிகள் யாரும் வாய் திறக்கவில்லை. அதேபோல் ஜெயேந்திரர் எப்போதுகாஞ்சி மடத்திற்கு திரும்புவார் என்பதும் தங்களுக்குத் தெரியாது என்று கூறி விட்டனர்.
இன்று பார்வையாளர்கள் யாரும் ஜெயேந்திரரை சந்திக்க வராததால், கலவை மடத்தில் பெரும் அமைதி காணப்படுகிறது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications