குடந்தை மடத்தை திருப்பி கொடுக்க அரசு முடிவு
சென்னை:
கையகப்படுத்தப்பட்ட கும்பகோணம் வீர சைவ மடத்தை அதன் மடாபதியிடமே திருப்பிக் கொடுக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
கும்பகோணத்தில் உள்ள வீர சைவ மடத்தை உள்ளூர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 17ம் தேதியன்று தமிழக அரசு திடீரென்றுகையகப்படுத்தியது. அதன் மடாதிபதி ஸ்ரீநீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் வலுக்கட்டாயமாக மடத்தை விட்டுவெளியேற்றப்பட்டார்.
இந் நிலையில் மடத்தின் சார்பில் ஏற்கனவே தொடரப்பட்டிருந்த ரிட் மனு மீதான விசாரணை நீதிபதி கே.டி.சிவசுப்ரமணியம்முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு மடாதிபதி ஒத்துழைப்பு தரவில்லை. எனவேதான் மடத்தை கையகப்படுத்தகும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது கும்பகோணம் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துநடைபெறவுள்ளது.
எனவே கையகப்படுத்தப்பட்ட மடத்தையும், அதன் சொத்துக்களையும் மடாபதி ஸ்ரீநீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளிடம்ஒப்படைக்க அரசு தயாராக உள்ளது. இருப்பினும் வழக்கை விரைவாக முடிக்க மடாதிபதி தரப்பு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
அரசுத் தரப்பின் உறுதிமொழியை ஏற்ற நீதிபதி ரிட் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதன் மூலம் வீர சைவ மடம்மீண்டும் மடாதிபதியிடமே ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. மடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மடாதிபதி தற்போதுகும்பகோணத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications