போலி விசா: ஓமன் செல்ல முயன்ற 30 பெண்கள் கைது
சென்னை:
போலி பாஸ்போர்ட்கள் மூலம் ஓமன் நாட்டுக்குச் செல்ல முயன்ற 30 பெண்களை சென்னை விமான நிலைய போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னையிலிருந்து இலங்கை செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்காக 30 இளம் பெண்கள் விமான நிலையம் வந்தனர்.இவர்களைப் பார்த்ததும் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பரிசோதித்துப் பார்த்தனர். அப்போதுதான்அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. போலி முத்திரைகள் அதில் அச்சிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அனைவரும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில்வெளியான தகவல்கள்:
இவர்களுக்கு 18 முதல் 35 வயது வரையிருக்கும். அனைவரும் திருச்சி, கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம் கூடுர், நெல்லூர்,விசாகப்பட்டனம், கேரளாவின் கொச்சி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். இலங்கை வழியாக ஓமன்செல்வதாக இவர்கள் திட்டமிட்டிருந்தனர். இவர்களை 4 ஏஜென்டுகள் கூட்டி வந்துள்ளனர்.
ஓமன் நாட்டில் வீட்டு வேலை செய்வதற்காக தாங்கள் அழைத்துச் செல்லப்படுவதாக இவர்கள் தெரிவித்தனர். ஆனால் இவர்கள்வைத்திருந்த வீட்டு வேலைக்கான விசாவும் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் உண்மையில் வீட்டு வேலைக்காகத்தான் அழைத்துச் செல்லப்பட்டார்களா அல்லது பாலியல் தொழிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வந்த ஏஜென்டுகளைப்போலீஸார் தேடி வருகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications