விபச்சார வீடு: புதுவையில் மக்கள் போராட்டம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வீட்டில் விபச்சாரம் நடத்தும் பெண்களைக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாண்டிச்சேரி தானம்பாளையம் கிராம மக்கள் தவளக்குப்பம் காவல் நிலையத்தின் முன்பு திரண்டனர். தங்களது கிராமத்தில் ஒருவீட்டில் பெண் ஒருவர், சில பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாகவும், அதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி,அப்பெண்ணைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
இதுதொடர்பாக போலீஸில் பலமுறை புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள்கோஷமிட்டனர்.
தானம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், விபச்சாரம் நடக்கும் வீட்டிற்கு வந்த ஒரு "கஸ்டமர்" தனது மோட்டார்சைக்கிளை அருகில் உள்ள நடராஜன் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு "வேலையைப்" பார்க்க சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த நபருடன் நடராஜன் வாகனத்தை எடுக்கச் சொல்லி சப்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்தகஸ்டமர் நடராஜனை அடித்துக் காயப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்தே கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர் என்றார்.
கிராம மக்களை சமாதானப்படுத்திய போலீஸார் விபச்சாரம் நடத்திய 2 பெண்களைக் கைது செய்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications