For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றப் பத்திரிக்கை தாக்கல்: ஜெயேந்திரர் மீது கொலை சதி- புதிய ஆதாரங்கள் சேர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Sankarramanசங்கரராமன் கொலை வழக்கில் இன்று 1,873 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமனைக் கொல்ல ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சதிசெய்ததாகக் கூறி இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாககுற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதே சட்டத்தின் 34வது பிரிவின் கீழும், 120-பி பிரிவின் (கொலைச் சதித் திட்டம் தீட்டுதல்) கீழும் வழக்குகள்பதிவாகியுள்ளன.

இந்தப் பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கலாம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டபோது போலீசார் வெளியிடாத சில முக்கியசாட்சியங்களும் இந்தக் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக ரவி சுப்பிரமணியம் அப்ரூவரராக மாறி தந்துள்ள சாட்சியம் போலீஸ் தரப்புக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்வகையில் அமைந்துள்ளதாக தனிப்படை வட்டாரங்கள் கூறுகின்றன.

370 சாட்சிகள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்தும் சங்கராச்சாரியார்கள் மீது 302வதுபிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக எஸ்பி பிரேம்குமார் தெரிவித்தார்.

முன்னதாக, பக்ரீதையொட்டி விடுமுறை தினமாக இருந்தபோதிலும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதிஉத்தமராஜன் இன்று நீதிமன்றம் வந்தார்.

எஸ்.பி. பிரேம்குமார் அவரது அறைக்குச் சென்று குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தார். அப்போது கூடுதல் எஸ்பி சக்திவேலு,அரசு வழக்கறிஞர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் 370 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வழக்கில் ஜெயேந்திரர் முதல் குற்றவாளியாகவும், கடைசியாக கைது செய்யப்பட்ட விஜயேந்திரர் இரண்டாவதுகுற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிக்கை தயார் செய்யும் பணி கடந்த 1 மாதமாக காட்டுப் பங்களாவில்தீவிரமாக நடந்து வந்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பேர் மீதும் தனித்தனியே குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களது பெயர்விவரம்:

1. ஜெயேந்திரர், 2. விஜயேந்திரர், 3. சுந்தரேச அய்யர், 4. ரகு, 5. அப்பு, 6. ரவி சுப்பிரமணியம், 7. கதிரவன், 8. சின்னா, 9. குமார்,10. அனந்த்குமார், 11. மாட்டு பாஸ்கர், 12. சில்வெஸ்டர், 13. அனில் குமார், 14. அம்பி, 15. பழனி, 16. குருவி ரவி, 17. சேகர், 18.செந்தில் குமார், 19. ஆறுமுகம், 20. மீனாட்சி சுந்தரம், 21. (இன்னொரு) ஆறுமுகம், 22. தில் பாண்டியன், 23. சதீஷ், 24.தேவராஜன், 25. அருண் ஆகியோர்.

இவர்களில் கூலிப் படையைச் சேர்ந்த கதிரவன், அனந்தகுமார், மாட்டு பாஸ்கர், அம்பிகாபதி, குருவி ரவி, மீனாட்சி சுந்தரம்,கே.எஸ்.குமார், சின்னா ஆகிய 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றம் அல்லது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடக்கும் என்று தெரிகிறது.

குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி நாடு முழுவதும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நிருபர்கள்,தொலைக்காட்சி கேமராமேன்கள், புகைப்படக் கலைஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்குத் தடை வாங்க உயர் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பான ஆயத்தப் பணிகளில்காஞ்சி மடத்தின் வழக்கறிஞர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பிரேம்குமார் பேட்டி:

குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்த பின்பு நிருபர்களிடம் பேசிய பிரேம்குமார்,

குற்றப் பத்திரிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டார். குற்றப் பத்திரிக்கை நகல் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தயாராகி,அதற்கு அடுத்த நாள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த வழக்கில் போலீசுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, மொத்தம் 370 பேர்சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 50 பேர் வரை ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டனர்.

வரதராஜ பெருமாள் கோவில் வைத்து இந்தக் கொலை நடந்தது. இதில் பெருமாளே (சாமி) முக்கிய சாட்சி. இதுசங்கராச்சாரியாருக்கும் வரதராஜ பெருமாளுக்கும் இடையே உள்ள பிரச்சனை. நான் வெறும் கருவி தான்.

குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் அனைத்துப்பிரிவுகளின் கீழும் வழக்குகள் போட்டுள்ளோம். ரவி சுப்பிரமணியம்தான் முக்கிய சாட்சி.

குற்றவாளிகளின் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும். ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கிலும் இம் மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்றார் பிரேம்குமார்.

ரவியால் மாட்டிய விஜயேந்திரர்:

விஜயேந்திரர் மீது முதலில் தங்களுக்கு சந்தேகம் அவ்வளவாக இருக்கவில்லை என்றும், ஆனால், சிஆர்பிசி 164வது பிரிவின்படிஅப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியம் கொடுத்த வாக்குமூலத்தால் தான் இந்தக் கொலையில் நம்பர் டூவே விஜயேந்திரர் தான்என்பது உறுதியானதாக போலீஸார் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X