ஜெ சொத்துக்களை முடக்க நடவடிக்கை: சு.சுவாமி
கலவை:
ஜெயேந்திரர் மீது வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்த முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்து அவரதுசொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
கலவையில் ஜெயேந்திரரை சந்தித்து விட்டு வெளியே வந்த சுப்பிரமணியம் சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயேந்திரர் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் முன் 173சிஆர்டிசி பிரிவின் கீழ் விசாரணை நடத்தியே வழக்கை முடிக்க வேண்டும். அதை மீறி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தாலும்,வழக்கு தோற்றுவிடும்.
பொய் வழக்கு தொடர்ந்ததற்காக 195, 340 பிரிவுகளின் கீழ் தமிழக அரசு மீதும், போலீஸார் மீதும் யார் வேண்டுமானாலும்வழக்கு தொடரலாம். நானே வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு கேட்பேன். ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க நடவடிக்கைஎடுப்பேன்.
மத்திய அரசு அனுமதியில்லாமல் காஞ்சி மடத்தின் கணக்கு வழக்குகளை முடக்கியிருக்க முடியாது. காஞ்சி மடத்தை தமிழக அரசுகைப்பற்ற முடியாது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதனால்தான் சங்கரராமன் கொலை போன்ற குற்றங்கள்நடக்கின்றன.
இந்த வழக்கில் போலீஸார் சிலர் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். இன்று அப்ரூவர்களாக மாறுபவர்கள் மறுநாள் இல்லை என்றுசொல்வார்கள். இந்த விவகாரத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
பெங்களூரில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு ஆண்டவன் நல்ல புத்தியைத் தர வேண்டும்.தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை கடவுள்தான் முடிவு செய்வார். இதிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது. ஜெயலலிதா இந்துமதத்தை நசுக்குகிறார் என்றார் சுவாமி. பேட்டியின்போது ஜனதாக் கட்சி மாநிலத் தலைவர் சந்திரலேகா உடனிருந்தார்.
இதற்கிடையே தமிழக முஸ்லீம் மக்கள் கட்சித் தலைவர் எஸ்.எம்.பாஷா ஜெயேந்திரைச் சந்தித்துப் பேசினார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications