எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் மீதும் எந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றமுழுமையான விவரம் கிடைத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் 1873 பக்க குற்றப்பத்திரிக்கை காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜிடம் நேற்று பிற்பகல்தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் குறித்துத் தெரிய வந்துள்ளது.
குற்றப்பத்திரிக்கை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173(2)ன் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயேந்திரர் முதல்குற்றவாளியாகவும், விஜயேந்திரர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், சின்னா, அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார்,அனில்குமார், மீனாட்சி சுந்தரம், பழனி குருவி ரவி, ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண், ஆறுமுகம், சேகர், சில்வஸ்டர்என்ற ஸ்டாலின், செந்தில்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கொலைக் குற்றம் (302), கூட்டுச் சதி (120பி), கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைதல் (449), சாட்சிகளை மறைத்தல் அல்லதுஅழித்தல் (213), ஆதாரங்களை மறைத்தல் அல்லது பொய்யான தகவல்களைத் தருதல் (214, 201), குற்றம் செய்வதை ஊக்குவித்தல் (109),கெட்ட நோக்கத்தோடு பொதுவான கூட்டுச் சதி (34) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரசே அய்யர், ரகு, அப்பு, கதிரவன் ஆகியோர் மீது 120பி, 302, 449, 201, 34 ஆகிய பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சின்னா, அனந்தகுமார், அனில்குமார் ஆகியோர் மீது 302, 109 ஆகிய பிரிவுகளின் கீழும், கே.எஸ்.குமார் மீது 449, 302, 109 ஆகியபிரிவுகளின் கீழும் மாட்டு பாஸ்கர், மீனாட்சி சுந்தரம், பழனி, குருவி ரவி ஆகியோர் மீது 214, 302, 109, 201 ஆகிய பிரிவுகளின் கீழும்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி குற்றவாளிகளான ஆறுமுகம், தில் பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண் ஆகியோர் மீது 213, 302, 201 ஆகிய பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகம், சேகர், சில்வஸ்டர், செந்தில்குமார் ஆகியோர் மீது 109, 201, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications