குமரி: பிப். 5 முதல் மீண்டும் படகு சவாரி
கன்னியாகுமரி:
சுனாமி அபாயம் முற்றிலும் நீங்கி கடல் இயல்பு நிலைக்கு வந்துள்ளதால் கன்னியாகுமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்குவருகிற பிப்ரவரி 5ம் தேதி முதல் மீண்டும் படகுப் போக்குவரத்தை தொடங்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்குதலில் கன்னியாகுமரியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குமரி முனையில் உள்ள விவேகானந்தர்பாறையில் மோதிய ராட்சத சுனாமி அலைகள் மக்கள் மனதிலிருந்து இன்னும் அகலவில்லை.
அதேபோல திருவள்ளுவர் சிலையையும் மூடும் அளவுக்கு ராட்சத அலைகள் எழுந்ததும் இன்னும் மனதில் நிழலாடி வருகிறது.
சுனாமிக்குப் பிறகு குமரிக் கடற்கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி நிறுத்தப்பட்டது. கடல் கொந்தளிப்பும், படகுகள்சேதமடைந்ததும் இதற்குக் காரணம். தற்போது நிலைமை சுமூகமாகி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கணிசமான எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர். இந் நிலையில் சேதமடைந்திருந்த படகுகளைசரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி முதல் விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரியைத் தொடங்க தமிழக சுற்றுலாத்துறை முடிவுசெய்துள்ளதாக அதன் செயலாளர் ராமதாஸ் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications