முட்டை திருட்டு: சிறுவனுக்கு தீ வைத்த சிறுவர்கள்!
பழனி:
முட்டை திருடிய விவகாரத்தில் சிறுவன் உயிரோடு எரிக்கப்பட்டான். இவனை எரித்ததும் இரு சிறுவர்களே.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பழனிக்கு அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் நடந்தது. இந்த ஊரில் கோபால் என்பவர் மளிகை கடைநடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் கோபிநாத். 13 வயதான கோபிநாத் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
கோபால் கடையில் இல்லாத நேரத்தில் கோபிநாத் கடையை பார்த்துக் கொள்வான். சில நாட்களுக்கு முன் கோபிநாத் கடையில்இருந்தபோது பார்த்திபன், முத்து (இருவருக்கும் வயது 13 தான்) ஆகியோர் கடைக்கு வந்துள்ளனர்.
கோபிநாத்திற்குத் தெரியாமல் இருவரும் கடையில் இருந்து முட்டையை எடுத்துச் சென்று விட்டனர். இது குறித்து பின்னர்தெரியவந்தவுடன் தனது சித்தப்பாவிடம் கோபிநாத் புகார் கூறியுள்ளான்.
கோபமடைந்த கோபால் பார்த்திபன், முத்து ஆகியோன் பெற்றோர்களை சந்தித்து சண்டை போட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பார்த்திபன், முத்து ஆகியோர் கோபமடைந்து, தங்களை மாட்டி விட்ட கோபிநாத்தை பழி தீர்க்க முடிவு செய்துள்ளனர்.
நேற்று மாலை கடைக்கு இந்த இருவரும் வந்தனர். அப்போது கோபிநாத் தனியாக இருந்தான். கடைக்குள் நுழைந்த இருவரும்கோபிநாத்தைத் திட்டியதோடு கடையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து கோபிநாத் மீது ஊற்றி தீவைத்துள்ளனர்.
இதில் பலத்த தீக்காயமடைந்த கோபிநாத் தீயில் கருகியபடி ஓடி வந்து தெருவில் வந்து விழுந்தான். பதறிப் போன அக்கம் பக்கத்தினர்அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கோபிநாத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து பார்த்திபன், முத்து ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications