சுனாமி பயம் போக்க மீன் விற்ற அமைச்சர்!
சென்னை:
மீன் சாப்பிடுவதால் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற மக்களின் அச்சத்தைப் போக்கும் விதத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர்ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று சென்னையில் மீன் விற்பனையில் ஈடுபட்டனர்.
சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு கடல் மீன்கள் விற்பனை படுத்துவிட்டது. மீன்களில் வைரஸ் மற்றும் பாக்டீயா பாதிப்பு இருக்கலாம் என்றபீதியால் மக்கள் மீன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன் விற்காமல் மீனவர்களும் வியாபாரிகளும் நொந்துபோயுள்ளனர்.
இந் நிலையில் மீன் சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில் சென்னை மாநகராட்சியில்சமீபத்தில் கவுன்சிலர்களுக்கு மீன் விருந்தளித்தார் துணை மேயர் கராத்தே தியாகராஜன்.
இதைத் தொடர்ந்து இன்று சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீன் விற்பனை செய்து மக்களின் பயத்தை போக்கும் முயற்சியில்ஈடுபட்டார். அதிமுக வட சென்னை மாவட்ட செயலாளர் சேகர் பாபு இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.
200 மீனவர்கள் புடை சூழ மீன் விற்பனையில் அமைச்சர் ஜெயக்குமார் ஈடுபட்டார். மீன் சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் வராது என்றுபொதுமக்களிடம் அவர் பிரசாரம் செய்தார்.
தண்டையார்பேட்டை வ.உ.சி. மீன் மார்க்கெட்டில் இந்த மீன் விற்பனை மற்றும் பிரசாரம் நடந்தது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications