ஜெயேந்திரர்: மனித உரிமை ஆணையத்துக்கு தடை
சென்னை:
போலீஸ் காவலில் இருந்தபோது ஜெயேந்திரர் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோ தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டதுமற்றும் விஜயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயேந்திரர் ஜனவரி 10ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து உடனடியாக விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்டார். இதனால் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதாகக் கூறி தேசிய மனித உரிமை ஆணையத்தில்புகார் அளிக்கப்பட்டது.
மேலும் போலீஸ் காவலில் இருந்து ஜெயேந்திரர், இளையவருக்கு எதிராகப் பேசிய பகுதி அடங்கிய வீடியோ காட்சிகள் தனியார்தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டன. இதை போலீசார் தான் வழங்கியதாகவும் மனித உரிமைக் கமிஷனிடம் புகார்தரப்பட்டது.
இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை டிஜிபிக்கும் தேசியமனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவை நீதிபதி சிவசுப்பிரமணியம் இன்று விசாரித்தார். அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, நீதிமன்றத்தில் இந்தக் கொலை வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந் நியிைல் இந்த விவகாரத்தில் தலையிட மனிதஉரிமை ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. இந்தத் தலையீட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசுக்கு இரு வார கால இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.போலீஸ் காவலில் இருந்தபோது ஜெயேந்திரர் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோ தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டதுமற்றும் விஜயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயேந்திரர் ஜனவரி 10ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து உடனடியாக விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்டார். இதனால் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதாகக் கூறி தேசிய மனித உரிமை ஆணையத்தில்புகார் அளிக்கப்பட்டது.
மேலும் போலீஸ் காவலில் இருந்து ஜெயேந்திரர், இளையவருக்கு எதிராகப் பேசிய பகுதி அடங்கிய வீடியோ காட்சிகள் தனியார்தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டன. இதை போலீசார் தான் வழங்கியதாகவும் மனித உரிமைக் கமிஷனிடம் புகார்தரப்பட்டது.
இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை டிஜிபிக்கும் தேசியமனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவை நீதிபதி சிவசுப்பிரமணியம் இன்று விசாரித்தார். அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, நீதிமன்றத்தில் இந்தக் கொலை வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந் நியிைல் இந்த விவகாரத்தில் தலையிட மனிதஉரிமை ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. இந்தத் தலையீட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசுக்கு இரு வார கால இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?

Click it and Unblock the Notifications