நெல்லை: ஜெயேந்திரர் தலையிட்ட கோவிலின் கணக்காளர் மர்ம கொலை
நெல்லை:
திருநெல்வேலியில் திருக்குறுங்குடி கோவிலின் கணக்காளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பிணம்தண்டவாளத்தில் துண்டு, துண்டாகிக் கிடந்தது.
இந்தக் கோவில் இருந்த சிவன் சன்னதியை ஜெயேந்திரர் அகற்ற முயன்றதும், இதை எதிர்த்த திருக்கோஷ்டியூர் மாதவன் மீதுதாக்குதல் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
காஞ்சி வரதராஜ பெருமாள் மேலாளர் சங்கரராமன், உத்தராதி மடத்தின் நிர்வாகி ஸ்ரீநிவாச்சார் ஆகியோர் கொல்லப்பட்டபரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் மாநிலத்தின் தென் பகுதியில் முக்கிய கோவிலின் கணக்காளர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த திருக்குறுங்குடி கோவிலில் பெருமாள் சன்னதியும் சிவன் சன்னதியும் எதிரெதிரே இருந்தன.இந்தக் கோவிலில் இருந்து சிவன் சன்னதி ஜெயேந்திரர் தலையீட்டின் பேரில் இடிக்கப்பட்டது.
இதற்கு அந்த ஊரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வைணவத் தலமான திருக்குறுங்குடி கோவிலில் ஜெயேந்திரர் அநாவசியமாகத்தலையிடுவதாகக் கூறி திருக்கோஷ்டியூர் மாதவன் புகார் செய்ததோடு, ஜெயேந்திரருக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கினார்.
இந் நிலையில் திருக்குறுங்குடி கோவிலின் கணக்காளரான முருகேச பணிக்கர் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரதுஉடல் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரல்வாய்மொழி ரயில்வே தண்டவாளத்தில் துண்டாகிக் கிடந்தது.
முதலில் இதை தற்கொலை வழக்காகப் பதிவு செய்த ரயில்வே போலீசார் இப்போது அதை கொ வழக்காக மாற்றியுள்ளனர்.
இவரை யார் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், இதிலும் ஜெயேந்திரரை முடிச்சு போடுவார்களோ என்ற அச்சம் அவரது பக்தர்களிடையே பரவியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications