அப்புவும் குண்டர் சட்டத்தில் கைதாகிறான்?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள நிலையில் கூலிப் படைத்தலைவன் அப்பு, போலிக் குற்றவாளி தில் பாண்டியன் ஆகியோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
அப்ரூவராக மாறிவிட்டதால் ரவி சுப்பிரமணியம் குண்டாஸ் சட்டத்தில் இருந்து தப்பியுள்ளார்.
அப்புவையும் அப்ரூவராக்க போலீஸ் தரப்பு தீவிரமாக முயற்சித்து வந்தது. ஆனால் அப்பு வளைந்து கொடுக்கமறுத்து வருவதாகத் தெரிகிறது.
இதனால் அப்பு மீதும் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்புவோடு சேர்த்து போலிக் குற்றவாளியான தில் பாண்டியனும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவுள்ளான். இந்த இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான பரிந்துரையை காஞ்சிபுரம்மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடேசனிடம் தனிப்படை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீதும் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க காவல்துறை முடிவுசெய்துள்ளதாக காஞ்சிபுரத்தில் நேற்று இரவு திடீரென வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து சங்கர மடம் முன்ஏராளமானனோர் திரண்டனர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுந்தரேச அய்யர், ரகு, கதிரவன் உள்ளிட்ட 10 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து அப்புவும் தில் பாண்டியனும் குண்டாஸில் உள்ளே போக இருக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து உச்சகட்டமாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீதும் இச் சட்டத்தை தமிழக அரசுபயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications