சுந்தரேச அய்யர் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சுந்தரேச அய்யர், கதிரவன் ஆகியோரது ஜாமீன் மனுக்களை சென்னை செஷன்ஸ்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
இவர்களது ஜாமீன் மனுக்கள் மீது ஏற்கனவே விவாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி முருகேசன் தனதுதீர்ப்பில்,
சுந்தரேச அய்யர், கதிரவன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை ஜாமீனில்விடுதலை செய்ய முடியாது என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
வங்கி கணக்கு முடக்கம் ரத்தாகுமா?
இதற்கிடையே சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை ரத்து செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கைவிடுத்தது.
சங்கர மடத்தின் 183 வங்கிக் கணக்குகளை தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது. அதில் 2 கணக்குகளை மட்டும் கையாள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிஅளித்தது.
இந் நிலையில் வங்கிக் கணக்குகளை முடக்கியதை எதிர்த்து சங்கர மடம் சார்பில சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குஇன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சங்கர மடம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், இந்திய குற்றவியல் தடுப்பு சட்டம் 120வது பிரிவின்படி அரசின் நடவடிக்கைசட்டவிரோதமானது என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி, ஜெயேந்திரரின் கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், வங்கிக் கணக்குகளும் தொடர்பு உள்ளது.எனவே வங்கிக் கணக்குகளை சங்கர மடம் கையாள அனுமதி அளிக்கக் கூடாது.
சங்கர மடத்திற்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் விற்கப்பட்டு அந்தப் பணம் மடத்தின் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ளது. மேலும் ரூ. 98லட்சம் அளவுக்கு சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகளில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து எல்லாம் விசாரிக்க வேண்டியுள்ளது.
எனவே வங்கிக் கணக்குகளை சங்கர மடம் கையாள அனுமதி தரக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நீதிபதி சுப்பிரமணியம் நாளையும் இந்த மனு மீது விசாரணை தொடரும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications