இடையூறு தேவதை: ஜெ. குறித்து கருணாநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் பல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் இங்கே உள்ள தேவதை (ஜெயலலிதா) இடையூறு செய்துகொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை மதுரவாயல் சந்திப்பில் நடந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து கருணாநிதி பேசியதாவது:

பொதுவாக இதுபோன்ற அடிக்கல் நாட்டு விழாக்களுக்கு நான் போவதில்லை. காரணம், அமைச்சர்களால் அல்லது பிரமுகர்களால்நாட்டப்படுகின்ற பல அடிக்கற்கள் அப்படியே பல ஆண்டு காலம் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும்.

நான் வேடிக்கையாக சொல்வதுண்டு. யாராவது பூசாரிமார்கள் அல்லது புரோகிதர்கள் ஒரு மாலையை அந்தக் கல்லில் போட்டால், அதைமதுரை வீரன்சாமி, காத்தவராயன் சாமி என்று ஊரிலே உள்ளவர்கள் வணங்கி விட்டு போவார்கள்.

இன்று அடிக்கல் நாட்டப்படுகின்ற திட்டங்களின் சரியான மதிப்பீடு ரூ. 480 கோடி. இதில் சென்னையில் அமைக்கப்படவுள்ளமேம்பாலங்கள் முக்கிய அம்சங்களாகும். அடையாறின் குறுக்கே 203 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம், போரூர் ஏரியின் குறுக்கே 462 மீட்டர்நீள புதிய பாலம் அமையவுள்ளது.

இதைத் தான் செய்கிறார்கள் அம்மா...

இரும்புலியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 45ஐ புறவழிச் சாலையுடன் இணைக்க ஏதுவாக கூடுதல் ஊடு பாலம் அமைக்கப்படவுள்ளது.

இதுதவிர பிப்ரவரி 1ம் தேதி சென்னை கத்திப்பாரா, கோயம்பேடு, பாடி சந்திப்புகளில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெறவுள்ளது. இதன் மதிப்பீடு ரூ. 200 கோடியாகும்.

மொத்தம் ரூ. 700 கோடி ரூபாய் திட்டங்கள் தமிழகத்திலே- கேட்டார்களே, 12 அமைச்சர்கள் டெல்லியில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று, அவர்களுக்கு நான் சொல்கின்ற பதில், இதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் அம்மா- என்பதைத் தவிரவேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

விளம்பரத்துக்காக மோதல்:

மத்திய அரசும், மாநில அரசும் மோதிக் கொள்கின்ற அரசாக இருக்கக் கூடாது என்பது என்னை ஆளாக்கிய, நம்மை ஆளாக்கிய தலைவர்பேரறிஞர் அண்ணாவின் கொள்கையும். வேறு சில மாநில முதல் அமைச்சர்களைப் போல மத்திய அரசோடு மோதிக் கொள்கிற அந்த இயல்எனக்குத் தெரியாது என்றார் அண்ணா.

சில பேர் மோதிக் கொண்டால்தான் விளம்பரம் கிடைக்கும் என்று மோதிக் கொண்டே இருப்பார்கள். அந்தத் சுபாவம் நம்மை ஆளாக்கியஅண்ணாவுக்குக் கிடையாது. அவர் வழியிலே நடந்து கொண்டிருக்கின்ற நமக்கும் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும்கிடையாது.

உரிமைக்காக குரல் கொடுப்போம், நம்முடைய பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம். யாரிடமும் தேவையில்லாமல் மோதிக்கொள்கிற, விளம்பரத்திற்காக மோதிக் கொள்கிற அரசியல் ஸ்டண்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக மோதிக் கொள்கிற நிலைமைஇன்றைக்கும் இந்த இயக்கத்தை நடத்துகிற எங்களுக்கு கிடையாது.

இடையூறு தேவதை:

இன்று, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு கடல் நீரை நல்ல நீராக ஆக்கித் தருகின்ற திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது. அது சென்னை மாநகரத்திற்கு மட்டுமல்லாது, கடற்கரை ஓரங்களிலே உள்ள நகரங்களுக்கெல்லாம் பகுதிக்கெல்லாம்பயன் தருகிற திட்டம்.

ஆனால் அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற விடாமல் எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அந்த இடையூறுகளைஇங்கேயிருக்கின்ற தேவதை (முதல்வர் ஜெயலலிதா) செய்து கொண்டிருப்பதை நீங்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள்.

தேவதை என்று சொன்னதற்காக தவறாக கருதக் கூடாது. தெய்வீகப் பெயரைத்தான் சொல்கிறேன். இடையூறு செய்வதைப் பற்றிக் கேட்டால்,டி.ஆர்.பாலு நாங்கள் கட்டவிருந்த தலைமைச் செயலகத்திற்கு தடை போடலாமா என்று கேட்பார்கள்.

இதுபோலத்தான் சேது சமுத்திரத் திட்டம். பல ஆண்டுகள் எண்ணிப் பார்க்காமல் கிடந்த சேது சமுத்திரத் திட்டம் இன்று நிறைவேறமுயற்சிகளை மத்திய அரசு எடுத்தால், அதற்கு நாம் எல்லாம் தோள் கொடுத்துத் துணை நின்றால், அதை ஆங்காங்கு சில மாவட்டங்களில்எதிர்த்து இந்தத் திட்டம் வரக் கூடாது, வந்தால், மீனவர்களுக்குப் பாதகம்-மீனவர்களுக்கு சுனாமியை விடவா பாதகம் வந்து விடப்போகிறது- என்றெல்லாம் பொய்யும், புளுகும் பிரசாரமாகச் செய்து அதைத் தடுக்க ஏதேதோ, செய்தார்கள்.

அதையெல்லாம் மீறி சேது சமுத்திரத் திட்டம் முக்கால் பகுதி இன்றைய தினம் நிறைவேறக் கூடிய வாய்ப்புகளை, வசதிகளைப் பெற்று,பாலுவின் முயற்சியினால், மத்திய அரசின் முயற்சியினால் வெற்றிகரமாக நிறைவேறவிருக்கிறது என்றால், யாரைத் தேர்ந்தெடுத்தால்தமிழர்களுக்காகப் பாடுபடுவோர்களோ, தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பார்களோ, பணியாற்றுவார்களோ அவர்களைத்தேர்ந்தெடுக்கின்ற பக்குவம் உங்களுக்கு வந்த காரணத்தினால்தான் என்றார் கருணாநிதி.

மதிமுக மாநாட்டுக்கு வாழ்த்து:

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 5ம் தேதி நடக்கும் இம் மாநாட்டில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இம் மாநாடு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், மாநாட்டில் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொள்வது பெருமைக்குரிய ஒன்று. இம் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் நல்வாழ்வு தொடர்பாக தீர்மானங்கள் இயற்றப்படும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மதிமுகமாநாட்டுக்கு கருணாநிதி வாழ்த்து அனுப்பியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+