ராமதாஸின் பெயர் "தமிழ்க் குடிதாங்கி": திருமாவளவன் சூட்டினார்!
சென்னை:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நாங்கள் தமிழ்க் குடிதாங்கி என்றுதான் அழைக்கிறோம். அதுமுழுமையானதமிழ் பெயர் தான் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படுவதை எதிர்த்து ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர்போர்க்கொடி தூக்கியுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களை திரையிடுவதை எதிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும்ராமதாஸ் என்ற பெயரே தமிழ்ப் பெயர் கிடையாதே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந் நிலையில் திருமாவளவன் இது குறித்துக் கூறுகையில்,
தமிழ்நாட்டில் டாக்டர் ராமதாஸை யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை. மருத்துவர் அய்யா என்றுதான்அழைக்கிறார்கள். நாங்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) தமிழ்க் குடிதாங்கி என்றுதான் அழைக்கிறோம். இதுமுழுமையான தமிழ் பெயர் ஆகும்.
பாமகவினரும் இனிமேல் தமிழ்க் குடிதாங்கி என்றுதான் ராமதாஸை அழைக்க வேண்டும். இந்தியாவில்மொழிக்காக உயிரிழந்த வரலாறு கொண்ட ஒரே இனம் தமிழர் இனம்தான்.
திரையுலகினர் பூச்சாண்டி காட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களது வேண்டுகோளை மீறிபிற மொழி பெயர் சூட்டினாலோ, தமிழ் சீரழிவு காட்சிகளை அமைத்துப் படம் எடுத்தாலோ, உயிரை விலையாகக்கொடுத்தாவது தடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications