வீரப்பனால் நின்ற திருவிழா: 12 ஆண்டுக்கு பின் மீண்டும்...
மேட்டூர்:
கொளத்தூர் வனப் பகுதி கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருவிழா வீரப்பனின் மரணத்தையடுத்துஇப்போது மீண்டும் நடக்கிறது.
பெரியதண்டா காட்டுப் பகுதியில் உள்ளது மூலநடுவு கிராமம். இங்கு ஒசாடாப்பன் என்ற ஒசாடசின்னப்ப சாமி கோவில் உள்ளது.இங்குள்ள மலைப் பகுதி மக்களான குரும்பர் இனத்தினரின் குல தெய்வம் இது.
இந்தப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததால், இங்கு பொது மக்கள் வந்து செல்ல அதிரடிப்படை தடை விதித்திருந்தது. இந்தக்கோவிலில் வீரப்பன் ஒரு மணியைக் கட்டியிருந்தான். அதில் வீரப்பன் உபயம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் மற்றும் அதிரடிப்படைரின் மிரட்டல்களால் கடந்த 12 ஆண்டுகளாக இந்தக் கோவிலில் திருவிழாவே நடத்தப்படவில்லை.
இப்போது வீரப்பன் போய்ச் சேர்ந்துவிட்டதால், இப் பகுதி மக்களுக்கு மீண்டும் சுதந்திரம் கிடைத்துள்ளது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்குமுன் கைவிடப்பட்ட கோவில் திருவிழாவை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 20,21ம் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. குறும்பனூர், ஜரத்தல், பெரியதண்டா, நவரை மத்திக்காடு, கண்ணாமூச்சிஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவுக்கு வரவுள்ளனர்.
நேர்த்திக் கடன் செலுத்த 500 ஆடுகள் வரை வெட்டப்படவுள்ளன. இப்போது வீரப்பன் இல்லாவிட்டாலும் கோவிலில் அவன் கட்டிய மணிஅப்படியே உள்ளது.
-
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
கோவை சிறுமி கொலை விவகாரத்தில் வித்தியாசமாக பேசிய சேரன்... கிளம்பிய புதிய விவாதம் -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
மனைவியின் மறைவுக்கு பிறகு முத்துக்காளை வெளியிட்ட வீடியோ... பார்ப்போரை கலங்க வைத்த "நன்றி” பதிவு!












Click it and Unblock the Notifications