பெங்களூர் விமான நிலையத்தில் தீ: ஒருவர் பலி
பெங்களூர்:
பெங்களூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், விமானங்கள் புறப்படுவதில் ஒன்றரை மணி நேர தாமதம் ஏற்பட்டது. தீவிபத்தின்போது ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத் திணறி ஒருவர் பலியானார்.
பெங்களூர் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தின் சமையலறையில் நேற்றிரவு 2.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவுவதற்குமுன்பு உணவக ஊழியர்கள் 60 பேரில் 59 பேர் வெளியேறி விட்டனர். ஒருவர் மட்டும் புகை மூட்டத்தில் சிக்கி மயக்கமானார்
.பின்னர் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், 6 எச்.ஏ.எல். தீயணைப்பு வண்டிகள் உட்பட 7 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயைஅணைத்தன. விபத்து காரணமாக விமான நிலையம் முழுவதும் புகை பரவியிருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கே விமானப்போக்குவரத்து தொடங்கியது.
இதன் காரணமாக 6 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. அவற்றில் சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக டெல்லி செல்லும் சகாராமற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களும் அடக்கம்.
முன்னதாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று விமான நிலைய இயக்குநர் பி.பி. பகத் கூறியதுகுறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications