சுனாமி பாதித்த பகுதிகளில் 10, +2 தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்தாவது மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இத் தகவலை அரசு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தது. கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் அவை விதி 110ன் கீழ் அறிக்கை ஒன்றைவாசித்தார்.
அதில், சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர்அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்தாவது மற்றும் 12வது வகுப்பு பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்றுஆசிரியர்களும், பெற்றோர்களும் விடுத்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுள்ளார்.
சுனாமியால் வீடுகள், உறவுகளோடு மாணவ, மாணவிகள் புத்தகங்கள், நோட்டுகளை இழந்துவிட்டனர். பள்ளிகளும் பல வாரங்கள்மூடப்பட்டன. இதனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களிலும் பத்தாவது மற்றும் 12வது வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்னெ.
இந்த மாவட்டங்களில் உள்ள 66 மேல் நிலைப் பள்ளிகளில் 12வது வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலும், 55 உயர் நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்திலும் தொடங்கும்.
இதுதொடர்பான கால அட்டவணைய, தேர்வுத்துறை இயக்குனரகம் தனியாக வெளியிடும்.
இதேபோல, சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம்ஆகியவற்றையும் அரசே ஏற்றுக் கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கட்ட வேண்டிய கல்வி மற்றும்சிறப்புக் கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
இதேபோல மாணவர்களின் தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இந்த கட்டணச் சலுகைகள் அடுத்த கல்வியாண்டிலும் தொடரும்என்றார் அமைச்சர் சண்முகம்
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications