பீகாரில் நாளை முதல் கட்ட தேர்தல்
பாட்னா:
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் 64 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
பீகாரில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளமும்,ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தியும் இந்தத் தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கட்சியுடன் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வைத்துள்ளது.
இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், ஹிசூவா மற்றும் பக்ஸர் தொகுதியில் இருகட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. லோக் ஜனசக்தி 45 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் போட்டியிடும்என்றும், கோஷி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஜகதீஸ் சர்மாவை ஆதரிப்போம் என்றும் முன்பு பாஸ்வான் கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு மாறாக 52 இடங்களில் லோக் ஜனசக்தியும், 21 இடங்களில் காங்கிரசும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
தொடக்கத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம் போட்டியிடும் இடங்களில் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தாது என்று அறிவித்திருந்தது.ஆனால் சேனாரி தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளருக்கு எதிராக தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் கஹல்கான் தொகுதியை மட்டுமே ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரசுடன் பகிர்ந்துள்ளது.இந்தத் தொகுதியில் கடந்த முறை சபாநாயகர் சதானந்த் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளம் 36 இடங்களிலும் பாஜக 27 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கோஷிதொகுதியில் இக் கூட்டணி போட்டியிடவில்லை.
இது தவிர பகுஜன் சமாஜ் கட்சி 64 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 33 தொகுதிகளிலும், சிபிஐ- எம்.எல். 32 தொகுதிகளிலும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும், சிபிஎம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மொத்தம் 826 வேட்பாளர்கள் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications