சன் டிவியை விமர்சிக்கலாமா?: கருணாநிதி
சென்னை:
சுனாமி நிவராணப் பணிகளுக்கு உதவிய திமுகவையும், சன் டிவியையும் விமர்சித்துப் பேசுவது சரியல்ல, அதுகண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னையில் ரூ. 200 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதியமேம்பாலங்கள், சுரங்கப் பாதை ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை திரிசூலம் ரயில் நிலையம்அருகே நடந்தது.
கருணாநிதி அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:
திமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் அதிக அளவில் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்கப்பட்டன.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின்போது பாலம் அமைக்கும்பணிகளுக்காக ரூ. 9.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் 1996ம் ஆண்டு முதல் 2001ம்ஆண்டுவரையிலான திமுக ஆட்சி காலத்தில் பாலங்கள் கட்டுவதற்காக ரூ. 120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சன் டிவிக்கு நேரம் ஒதுக்கவில்லை..
சுனாமி நிவாரண நிதியாக சன் டிவி மூலம் ரூ. 5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை முதலமைச்சர்பொது நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக முதல்வரிடம் நேரம் கேட்டு சன் டிவி நிர்வாகம் சார்பில் கடிதம்எழுதப்பட்டது. ஆனால் அதற்கு இதுவரை பதிலே வரவில்லை.
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் என்ற முறையில் சன் டிவி நிர்வாகிகள், என்னிடமும், பொதுச் செயலாளரிடமும்ஆலோசனை கேட்டனர். சன் டிவிக்கு பணம் கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும்உதவி செய்துள்ளனர்.
எனவே இதை பிரதமர் பொது நிவாரண நிதியில் சேர்த்து விடுமாறு நான் கூறி விட்டேன்.
பிரதமரிடம் கொடுத்து விட்டார்களே என்று யாரும் (ஜெயலலிதா) சொல்லி விடக் கூடாது என்பதற்காக இதைக்கூற நேர்ந்தது. எதற்காக சன் டிவிக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று தெரியவில்லை.
அதனால் சன் டிவிக்கு விளம்பரம் கிடைத்து விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட அவர்கள் மெளனமாகஇருந்திருக்கக் கூடும்.
சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும்பாடுபட்டோம். திமுக சார்பில் பிரதமரிடம் ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது.
2 படங்களில் திரைக்கதை எழுதியதற்காக எனக்குத் தரப்பட்ட ரூ. 21 லட்சத்திற்கான காசோலையை, நான் செல்லவிரும்பாத காரணத்தால் அல்ல, செல்ல இயலாத காரணத்தினால், ஸ்டாலின் மூலம் முதலமைச்சரிடம்சேர்ப்பித்தேன்.
அடுத்த சில நாட்களிலேயே என்னையும், சன் டிவியையும் கடுமையாகத் தாக்கி முதல்வர் அறிக்கைவெளியிடுகிறார். நெருக்கடியான நேரத்தில் உதவி செய்பவர்களை இப்படி கடுமையாக விமர்சிப்பது சரியல்ல,கண்டனத்துக்குரியது.
இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள் சென்னைக்கு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்கும் இன்றியமையாதது. நெடுஞ்சாலைகள் ரத்த நாளங்கள் போன்றவை. அதி முக்கியமானவை.
இதன் அவசியத்தைக் கருதித்தான் சாலைப் போக்குவரத்திற்காக தனித்துறை உருவாக்கப்பட்டது. தனிஅமைச்சகத்தையும் உருவாக்கினோம்.
கடந்த திமுக ஆட்சியில் நெடுஞசாலைத் துறைத் திட்டங்களுக்காக ரூ. 3,729 கோடி ஒதுக்கப்பட்டது. தேசியநெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 120 கோடி மதிப்பில் பாலங்களைக் கட்டினோம்.
ஆனால் அதிமுக ஆட்சியில் ரூ. 1,632 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றார் கருணாநிதி.
நலந்தானா, நலந்தானா:
முன்னதாக கருணாநிதி மேடைக்கு வரும்போது தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் நலந்தானா,நலந்தானா என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.
இதைக் கேட்டதும் கூடியிருந்த திரளான திமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி தலைவா நலம்தானா என்றுகுரல் எழுப்பி கருணாநிதியை வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications