வீரப்பன்: பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் தர உத்தரவு
சென்னை:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவிகளை தமிழக அரசுவழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீ திமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எஸ்.சிவக்குமார் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வீரப்பனால்கொல்லப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. அதிரடிப்படையினருக்கு மட்டும் அரசு பரிசுகளை அள்ளிக்கொடுத்துள்ளது.
அதிரடிப்படையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா தவறு. அதற்கான செலவுத் தொகையை வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின்குடும்பங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ராமலிங்கம் ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,ஏற்கனவே இதே மனுதாரர் பலமுறை பொய்யான தகவல்களைக் கூறி வழக்கு போட்டுள்ளார். முரசொலி மாறன் தபால் தலை வெளியிடத்தடை கோரி முன்பு இவர் மனு செய்துள்ளார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
விளம்பர நோக்கில் மனுத் தாக்கல் செய்வது இவரது வாடிக்கையாகப் போய் விட்டது. எனவே இந்த மனுவும் டிஸ்மிஸ் செய்யப்படுகிறது.தொடர்ந்து இதுபோல செய்யாமல் இருக்கும் வகையில் மனுதாரருக்கு ரூ. 25,000 அபாரதம் விதிக்கப்படுகிறது.
இந்தத் தொகை வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அளிக்கப்படும். மேலும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கையின்படிபாதிக்கப்பட்டவர்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவியை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையையும் தமிழக அரசையும் நீதிபதிகள் பாராட்டினர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications