ஹைதராபாத் ஓபன் டென்னிஸில் சானியா
ஹைதராபாத்:
அடுத்த வாரம் தொடங்கும் ஹைதராபாத் ஓபன் டென்னிஸில் சானியா மிர்சா விளையாடுகிறார்.
சானியா கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 3வது சுற்று வரை விளையாடிய ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.இவர் வரும் திங்கட்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கும் டபிள்யூ.டி.ஏ. தொடரில் விளையாடுகிறார். இந்தப் போட்டித்தொடரின் பரிசுத் தொகை 1,40,000 அமெரிக்க டாலர்களாகும்.
இந்தத் தொடரில் விளையாடுவது குறித்து,
ஹைதாராபாத் தொடரில் விளையாடும்படி யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. இது எனது சொந்த மண்ணில்நடைபெறும் போட்டி என்பதால் நான் விளையாட விரும்புகிறேன்.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு எனது இடது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும்அது எனது விளையாட்டுத் திறனைப் பாதிக்காது. இத்தகைய சவாலான சமயங்களில் எனது திறனை வெளிப்படுத்துவதில்மகிழ்ச்சியடைகிறேன்.
கிரிக்கெட் தவிர்த்து வேறு விளையாட்டுக்களும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். இது நல்ல விஷயம்.டென்னிஸ்தான் எனது முதல் விருப்பம். இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் புகழ் அதன் மூலமே கிடைத்தது. எனவேடென்னிசுக்கே நான் முதலிடம் கொடுப்பேன்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்சுடன் தோற்றாலும், இந்த ஆண்டுக்குள் உலகின் முதல் 50வீராங்கணைகளில் ஒருவராக வர முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது.
உலகின் முதல் 100 வீராங்கணைகளில் ஒருவராக வருவதை விட முதல் 300 வீரர்களில் ஒருவராக வருவது கடினம் என்று சிலர்கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவில் பில்லியன் கருத்துக்கள் வரத்தான் செய்யும்என்றார்.
ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா நவரத்திலோவா சானியாவுடன் இணைந்து விளையாடுவார்என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நவரத்திலோவா வேறு யாருடனாவது இணையக்கூடும் என்றும்கூறப்படுகிறது.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications